ஆஸ்கர் விருதுகளை அள்ளிய" பாரசைட்"'படம்.!! விஸ்வரூபம் எடுக்கும் திருட்டு கதை???

By Thiraviaraj RMFirst Published Feb 15, 2020, 10:06 AM IST
Highlights

பாரசைட் படத்தின் கதையும் 'மின்சார கண்ணா' படம் போல் உள்ளதே என்கிற கேள்விக்கு, அப்படியொரு கதையை  நான் 20 வருடங்களுக்கு முன்பே எடுத்துவிட்டேன்.இந்த படத்தின் படத்தின் உரிமை, தயாரிப்பாளர் தேனப்பனிடம் தான் உள்ளது. அவர் தான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார். 

T.Balamurukan

 92-ஆவது ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.சா்வதேசத் திரையுலகமும், திரைப்பட ரசிகா்களும் அந்த படத்துக்கு ஆஸ்கர் விருது எதிர்பார்த்து காத்திருந்தனர்.அப்படம் கொரிய மொழியில் எடுக்கப்பட்ட சா்வதேச அளவில் கவனம் ஈா்க்கப்பட்ட படம் தான் ‘பாரசைட்’ திரைப்படம்.இது ஒரு சிறந்த திரைப்படம்.  வெளிநாட்டு மொழியில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு, சா்வதேச திரைப்படம்,  சிறந்த இயக்குநா், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் 4 ஆஸ்கா் விருதுகளை அள்ளியது.

தென்கொரியாவில் முன்னணி இயக்குநரான போங் ஜூன் ஹோ, இந்தப் படத்தின் இயக்குநர். கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தை கொரிய சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆசிய கண்டத்தில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இயக்குநர் என்ற சாதனையை படைத்துள்ளர் போங் ஜூன் ஹோ. பாரசைட் படத்தின் கதை, விஜய் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ல் வெளியான 'மின்சார கண்ணா' படத்தைப் போலவே இருக்கிறது என்று சமூகவலைத்தளங்களில் சிலர் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். 

ஏழ்மை காரணமாக, பணக்காரக் குடும்பத்தில், பொய் சொல்லி வேலைக்குச் சேர்கிறான் இளைஞன் ஒருவன். அந்த குடும்ப பணக்கார வீட்டுப் பெண் அவனை விரும்புகிறாள். பல பொய்கள் சொல்லி தன் வீட்டு உறுப்பினர்களை அந்தப் பணக்கார வீட்டில் வேலைக்கு சேர்த்து விடுகிறான். அந்தக் குடும்பத்தில் பணியாற்றும்போது கிடைக்கும் சொகுசு வாழ்க்கை அவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது. அதுவே அவர்களுக்கு மேலும் பல சிக்கல்களைக் கொண்டு வருகிறது. - இது பாராசைட் கதை.

பணக்காரரான குஷ்புவின் தங்கையைக் காதலிக்கிறார் விஜய். இதனால் அந்தப் பணக்காரக் குடும்பத்தில் பாதுகாவலர் போல உள்ளே நுழைகிறார் விஜய். அப்படியே வேலைக்காரர்களாக, விஜய் குடும்பத்தினர் குஷ்புவின் வீட்டுக்குள் நுழைந்து விஜய்யின் காதலுக்கு உதவி செய்கிறார்கள். கடைசியில் குஷ்புவின் மனதை மாற்றி காதலியைக் கைப்பிடிக்கிறார் விஜய் - இது மின்சார கண்ணா கதை.இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபமெடுக்க காத்திருக்கிறது. பாரசைட் படத்தின் கதையும் 'மின்சார கண்ணா' படம் போல் உள்ளதே என்கிற கேள்விக்கு, அப்படியொரு கதையை  நான் 20 வருடங்களுக்கு முன்பே எடுத்துவிட்டேன்.இந்த படத்தின் படத்தின் உரிமை, தயாரிப்பாளர் தேனப்பனிடம் தான் உள்ளது. அவர் தான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார். 

இந்நிலையில், ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் தேனப்பன்,' வெளிநாட்டு விவகாரம் என்பதால் அதற்குரிய வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். விரைவில் தகவல் தெரிவிப்பேன் என்கிறார்.ஆஸ்கர் விருது பெற்ற "பாரசைட்" படம் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. 

click me!