கல்லூரி மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய கல்லூரி ஆசிரியர்கள்!! பதறிய மாணவிகள். ஏன்? எதற்காக?

By Thiraviaraj RMFirst Published Feb 15, 2020, 9:16 AM IST
Highlights

ஹாஸ்டலில் தங்கியிருந்த 68 மாணவிகளையும் கல்லூரி நிர்வாகம் விசாரணைக்கு அழைத்தது . 68 மாணவிகளில் யார், யார் மாதவிடாய் காலங்களில் இருக்கின்றனர் என்று முதல்வர் மற்றும் 'ஹாஸ்டல்' நிர்வாகிகள் கேட்டிருக்கிறார்கள்.
 அதில், 2 பேர் ஒதுங்கியிருறார்கள். அதன்பிறகும் நம்பாத கல்லூரி நிர்வாகத்தினர், எஞ்சியிருந்த 66 பேரை கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் உள்ளாடைகளை அகற்றச் செய்து, அவர்களுக்கு மாதவிடாய் இருக்கிறதா? இல்லையா?

T.Balamurukan

மாணவிகள் மாதவிடாய் காலத்தில் கோயிலுக்கும்,சமையலறைக்கும் போனது குற்றம் என்று கூறி 68 மாணவிகளையும் அம்மணப்படுத்தி அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள் கல்லூரி ஆசிரியர்கள்.இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலம், பூஜ் பகுதியில் 'ஸ்ரீசஹ்ஜானந்த்' பெண்கள் இன்ஸ்ட்டியூட் என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2012ம் ஆண்டு முதல் இந்த கல்லூரியில் சுமார் 1500  மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியின் கட்டுப்பாட்டில் 'ஹாஸ்டல்' ஒன்றும் இயங்கி வருகிறது.இந்த விடுதியில் 68 மாணவிகள் தங்கி இருப்பதாக தெரிகிறது. இந்த மாணவிகள் அனைவருமே தொலைதூரத்தில் உள்ள  கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 'ஹாஸ்டலில் நடந்த ஒரு சம்பவம் கொடுமையானது. கடவுள் நம்பிக்கை தலைக்கு ஏறியவர்களால் நடந்த கொடுமை இது. அதாவது, மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பலரும் சமையலறைக்கு செல்வதாகவும், கல்லூரி வளாகத்தில் உள்ள கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவதாக புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து 'ஹாஸ்டலில் தங்கியிருந்த 68 மாணவிகளையும் கல்லூரி நிர்வாகம் விசாரணைக்கு அழைத்தது . 68 மாணவிகளில் யார், யார் மாதவிடாய் காலங்களில் இருக்கின்றனர் என்று முதல்வர் மற்றும் 'ஹாஸ்டல்' நிர்வாகிகள் கேட்டிருக்கிறார்கள். அதில், 2 பேர் ஒதுங்கியிருறார்கள். அதன்பிறகும் நம்பாத கல்லூரி நிர்வாகத்தினர், எஞ்சியிருந்த 66 பேரை கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் உள்ளாடைகளை அகற்றச் செய்து, அவர்களுக்கு மாதவிடாய் இருக்கிறதா? இல்லையா? என்று சோதனை நடத்தி உள்ளனர்.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த கேவலமான செயல் தற்போது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்காக  விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால்,அக்கல்லூரி பொறுப்பு துணைவேந்தர், கிரந்திகுரு ஷியாம்ஜி  விசாரணைக் குழு அமைத்து இருக்கிறார்.

click me!