செந்தில் பாலாஜி இருக்கிற கட்சி உருப்படாது... ஆண்டிபட்டியில் அந்தர் பண்ணிய ஓபிஎஸ்!

By vinoth kumarFirst Published Dec 23, 2018, 12:17 PM IST
Highlights

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 4 பேர் தன்னை சந்திக்க தூதுவிட்டதாக துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 4 பேர் தன்னை சந்திக்க தூதுவிட்டதாக துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று ஆண்டிப்பட்டி தொகுதி முதல் இடத்தை பெறும் என்றார்.

அதிமுகவில் இருந்து ஏன் தினகரன் நீக்கப்பட்டார் என்பது எனக்கும் ஜெயலலிதாவுக்கு மட்டும் தான் தெரியும் என்றார். ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்கத்தமிழ்ச்செல்வன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகு ரூ.1088 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 4 பேர் தன்னை சந்திக்க தூதுவிட்டதாகவும், திமுகவில் சேர்ந்துள்ள செந்தில்பாலாஜி அதிமுகவில் இணைவதற்கு மனு அளித்துள்ளதாகவும், பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றிபெறும் முறையில் தொண்டர்கள், நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

click me!