தமிழக பிஜேபி தலைவர் பதவிக்கு நடக்கும் செம்ம சண்டை! ஜெயிக்கப்போவது யாரு?

By sathish kFirst Published Dec 23, 2018, 11:18 AM IST
Highlights

தமிழக பிஜேபிக்குள் நடக்கும் கோஷ்ட்டி மோதலை,  சமீபத்தில் டெல்டாவை அடித்து துவம்சம் பண்ணிய கஜா காட்டிக் கொடுத்தது.

பிரதமர் மோடி ஒருபக்கம் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் வீடியோ கான்பிரன்சில் மீட்டிங், கூட்டணி டீலிங் என அடுத்தடுத்து பிசியாக இருக்கும் இந்த நேரத்தில்.  தமிழக பிஜேபி தலைவர்களுக்குள் குடுமிப்பிடி சண்டை கமலாலயத்தில் அரங்கேறியிருக்கிறது.

தமிழக பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு பக்கம் என்று இரண்டு அதிகார மையங்கள்  எதிரும் புதிருமாக இருப்பது தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட கஜா புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. அதேநேரம் கஜா புயலை மையமாக வைத்து தமிழக பாஜகவுக்குள்ளும் உட்கட்சி மோதல் என்ற புயல் வீசிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்.

தமிழக பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை ஒரு பக்கம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  இரண்டு தலைகளும் எதிரும் புதிருமாக இருப்பது தமிழக பிஜேபியின் மத்தியில் கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது.

இதற்கு கஜா புயல் நிவாரணப்பணிகளில்,  தமிழிசை தானே நேரில் சென்று பார்வையிட்டார். அரசியல்வாதியாக மட்டுமல்ல, ஒரு மருத்துவராகவும்  இலவசமாக மருந்து மாத்திரைகளை அதகள படுத்தினார். தமிழிசையின் இந்த செயலை கேலிசெய்தவர்கள் கூட புகழும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து கஜா புயல் சேதாரங்களை பொதுமக்களின் பாதிப்புகளை அறிக்கையாகத் தயார் செய்து தருவதற்காக ஒரு குழுவை நியமித்தார் தமிழிசை.

இந்தக் குழு பாஜக மாநில விவசாயி அணி துணை தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் அமைக்கப்பட்டது. மொத்தமாக கள ஆய்வு செய்த இந்தக் குழு  அறிக்கையை தமிழிசையிடம் ஒப்படைத்தது. இந்த அறிக்கையை டெல்லிக்கு அனுப்புவதற்குள். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து அடுத்தடுத்த அறிவுப்புகளை வெளியிட்டதால் தமிழிசைக்கு ஒரே ஷாக். 

ஷாக்கிலிருந்து மீண்டு வருவதற்குள், தமிழிசையை ஓரங்கட்டி முந்த வேண்டும் என்று பிளான் போட்ட, பொன்னார் கோஷ்ட்டி தமிழிசை தயாரித்த கள ஆய்வு அறிக்கையை ஓரங்கட்டிவிட்டுத் தமிழிசைக்கே தெரியாமல் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் என கூட்டமாக  மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கை சந்தித்துள்ளார். 

பொன்னார் கோஷ்ட்டி தன்னை கழட்டி விட்டுவிட்டு இப்படி ஒரு சந்திப்பை நடத்தியிருப்பதால், மிகுந்த மனா உளைச்சலில் இருக்கும் தமிழிசை  கொஞ்ச நாள் கழித்து டெல்லி சென்று  மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கை சந்திக்க உள்ளாராம்.

click me!