அப்செட் ஓபிஎஸ்..! ஆத்திரத்தில் ரவீந்திரநாத்..! எடப்பாடிக்கு குடைச்சல் கொடுக்க முடிவு..?

By Selva KathirFirst Published May 31, 2019, 10:32 AM IST
Highlights

மத்திய அமைச்சரவையில் தனது மகனுக்கு இடம் கிடைக்க விடாமல் செய்ததால் எடப்பாடி தரப்புக்கு குடைச்சல் கொடுக்க ஓபிஎஸ் நேற்று இரவே ஆயத்தம் ஆகி விட்டதாக சொல்கிறார்கள்.

மத்திய அமைச்சரவையில் தனது மகனுக்கு இடம் கிடைக்க விடாமல் செய்ததால் எடப்பாடி தரப்புக்கு குடைச்சல் கொடுக்க ஓபிஎஸ் நேற்று இரவே ஆயத்தம் ஆகி விட்டதாக சொல்கிறார்கள்.

பிரதமரின் இல்லத்திற்கு தேநீர் விருந்துக்கு வருமாறு ரவீந்திரநாத் குமார் க்கு அழைத்து வந்ததை தொடர்ந்து அவரது மத்திய அமைச்சர் பதவி உறுதியானது. ஆனால் தேநீர் விருந்துக்கு புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாஜக மேலிடம் தற்போதைக்கு மத்திய அமைச்சராக வாய்ப்பு இல்லை என்று ஓபிஎஸ் இடம் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது. இதனால் நிலைகுலைந்து போன ஓபிஎஸ் மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்க திட்டமிட்டதாக சொல்கிறார்கள். 

ஆனால் அதே மகனது அரசியல் வாழ்விற்கும் முடிவுரை எழுதி விடும் என்பதால் நிதானத்திற்கு வந்த ஓபிஎஸ் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு திரும்பி உள்ளார். தனது மகனுக்கு எதிராக வைத்தியலிங்கத்தை எடப்பாடி தரப்பு முன்னிறுத்தி அதையே ஓ பி எஸ் ஆல் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் தனது வலுவான டெல்லி தொடர்பு தனது மகனுக்கு மத்திய அமைச்சரவை பதவியைப் பெற்றுக் கொடுத்து விடும் என்று தீர்க்கமாக நம்பிக் கொண்டிருந்தார் ஓபிஎஸ்.

ஆனால் எதிர்பார்த்ததற்கு நடைபெறாத சூழலில் எடப்பாடி தரப்புக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள ஓபிஎஸ் இனி அதற்கேற்றாற்போல் தனது அரசியல் வியூகத்தை வகுத்து என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதே போல் தான் மத்திய அமைச்சராக போவதாக ஊரெல்லாம் கூறிவிட்டு டெல்லி சென்ற ரவீந்திரநாத் குமார் வெறும் கையோடு தமிழகம் திரும்ப முடியாமல் ஆத்திரத்தில் இருந்து வருகிறார். தன்னை மத்திய அமைச்சர் ஆக்காமல் தடுத்தது எடப்பாடி எடப்பாடி தான் என்று தெரிந்து உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்று தந்தையை ரவீந்திரநாத் நெருக்கி வருவதாகவும் சொல்கிறார்கள். 

இதனால் மிக விரைவில் பரஸ்பரம் இரு தரப்பினரும் வெளிப்படையாக இல்லை என்றாலும் மறைமுகமாக மோதிக்கொள்வார்கள் என்கிறது அதிமுக வட்டாரம்.

click me!