பிரதமருக்கே அல்வா கொடுத்தார் ஓ.பி.எஸ்...! விருது விஷயத்தில் வருது வருது பஞ்சாயத்து!!

By Vishnu PriyaFirst Published Jan 5, 2019, 1:53 PM IST
Highlights

இந்தியாவில் விருதுகளுக்குப் பின்னால் அரசியல் ஒளிந்திருப்பதும், ஒரு கட்டத்தில் திரைகிழிந்து விஷயம் வெளிப்பட்டதும் ஆளாளுக்கு லபோதிபோ என அடித்துக் கொள்வதும் வழக்கம்தான். அப்படியொரு பஞ்சாயத்தில் சிக்கியிருக்கிறார் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

இந்தியாவில் விருதுகளுக்குப் பின்னால் அரசியல் ஒளிந்திருப்பதும், ஒரு கட்டத்தில் திரைகிழிந்து விஷயம் வெளிப்பட்டதும் ஆளாளுக்கு லபோதிபோ என அடித்துக் கொள்வதும் வழக்கம்தான். அப்படியொரு பஞ்சாயத்தில் சிக்கியிருக்கிறார் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

பிரச்னை இதுதான்... மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டு தோறும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அலசி ஆராய்ந்து, சிறந்த பத்து காவல்நிலையங்களை தேர்ந்தெடுத்து விருது கொடுக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காவல்நிலையம் எட்டாவது இடம் பிடித்து விருதை வென்றது. துணை முதல்வரின் சொந்த தொகுதியை சேர்ந்த போலீஸ் ஸ்டேஷன் இது, அதுவும் அவரது சொந்த ஊரிலேயே இருக்கிறது. எனவே இந்த விருதை சொல்லி பன்னீர் அணியினர் ஓவராக பரவசப்பட்டனர். 

துணை முதல்வரும் அந்த ஸ்டேஷனுக்கு நேரில் சென்று போலீஸாரை வாழ்த்தி, குரூப் போட்டோவெல்லாம் எடுத்துக் கொண்டார். ஆனால் அதேவேளையில் அ.தி.மு.க.வின் இன்னொரு பிரதான அணியான முதல்வர் எடப்பாடி பழனிசாமி டீமோ ‘இதுல ஏதோ ஒரு உள்குத்து இருக்குதுண்ணே! தமிழ்நாட்டுல அம்பூட்டு போலீஸ் ஸ்டேஷனெல்லாம் இருக்குது. அதையெல்லாம் விட்டுப்புட்டு இங்குட்டு வந்து ஏன் அவார்டு கொடுக்குறாய்ங்க, அப்பூடி என்னத்த சாதிச்சிடுச்சு இந்த ஸ்டேஷனு?’ என்று சந்தேகத்தை சவுண்டாக கிளப்பியதோடு, இதன் பின்னணியையும் தோண்டித் துருவி சிலரை கிளப்பிவிட்டார்கள். 

அந்த வகையில் விருது விவகாரத்தை சர்ச்சையாக்கி பேச துவங்கியிருக்கிறார் தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பெரியகுளம் நகர செயலாளரான துரை. அவர் “இந்த ஸ்டேஷனோட லிமிட்டுக்குள்ளே வர்ற கைலாசப்பட்டியிலதாம் துணை முதல்வரோட தம்பி ஓ.ராஜா மணல் கடத்தல் பண்றாரு. இதை பத்தி கல்கெடர்ட்ட புகார் கொடுத்தோம், கண்டுக்கல. ஆனா நான் புகார் கொடுத்த கொஞ்ச நாள்ள ராஜாவோட ஆளுங்க வந்து என்னை நடுரோட்டுல அடிச்சு வெளுத்தாய்ங்க. அப்போ என்னை வந்து விசாரிச்சாய்ங்க இதே வடகரை போலீஸ் ஸ்டேஷன்காரங்க. அவிய்ங்கட்ட ‘ஓ.ராஜாவால் என் உயிருக்கு ஆபத்து. அவரது தூண்டுதலில் என் மேலே கொலைவெறி தாக்குதல் நடந்திருக்குது.’ன்னு புகார் கொடுத்தேம்.

 

நியாயப்படி என் புகாரை தெளிவா விசாரிச்சுட்டு, ஓ.ராஜா மேலே எஃப்.ஐ.ஆர். போட்டு கைதே பண்ணியிருக்கணும். ஆனால் அதையெல்லாம் பண்ணவேயில்லை. என் புகாருக்காக ரசீது மட்டும் கொடுத்தாய்ங்க, கேவலம் அதுல கூட துணை முதல்வர் தம்பி பெயரை போடலை. அம்பூட்டு நியாயமாகவும், நேர்மையாகவும், துணிச்சலாகவும் இருக்குது இந்த வடகரை போலீஸு. இதுக்குதாம் விருது!” என்று பொங்கியிருக்கிறார். 

இந்நிலையில், துணை முதல்வரின் சிபாரிசின் பெயரில்தான் இந்த விருதை வடகரை போலீஸுக்கு வழங்கியிருக்கின்றனர் என்று கிளம்பியுள்ளது ஒரு அக்கப்போர். இதை  கிளப்பியதே எடப்பாடியார் டீம் தான். “தன்னோட தம்பி மேலே அவ்ளோ பெரிய புகார் வந்தும் கூட அதை லாவகமா கையாண்டு, எஸ்கேப் பண்ணிவிட்டது இந்த வடகரை போலீஸ் ஸ்டேஷன். அவிய்ங்களுக்கு எதாச்சும் பெருசா பண்ணனும்னு  பன்னீரு ஆசைப்பட்டார். இந்த நிலையிலதான் மத்திய உள்துறை அமைச்சகத்தோட டீம் நாடு முழுக்க சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களை அலச இறங்கியிருக்கிற ரகசிய தகவல் அவருக்கு கிடைச்சுது. 

அதை அப்படியே தேனி மாவட்ட போலீஸ் அதிகாரி கவனத்துக்கு கொண்டு போயி, வடகரை போலீஸ் ஸ்டேஷனுக்கு பெயிண்டு அடிச்சு பளிச்சுன்னு ஆக்க வெச்சார். கூடவே அந்த ஸ்டேஷன்ல புகார் மனுக்கள், ஃபைல்களை டிஜிட்டல் முறையில கையாளுறாங்கன்னு சில சிறப்பம்சங்களை அந்த விருது குழுவோட பார்வைக்கு தட்டிவிட்டார். காரியம் கச்சிதமா முடிஞ்சுது! ஆக மொத்தத்துல தன் சொந்த விஷயத்துக்காக மத்திய அரசு விருதையே பைபாஸ்ல பயன்படுத்தியிருக்கார் பன்னீரு. பிரதமருக்கே அல்வா கொடுத்திருக்கார் இதன் மூலமா.” என்று வசை மாறி பொழிகின்றனர். தமிழ்நாட்டுல இருந்து பிளாஸ்டிக் கூட ஒழிஞ்சுடும், ஆனா இவிய்ங்க ரெண்டு டீம் சண்ட மட்டும் ஓயாது போல.

click me!