துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் கூறுவது என்ன? அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி சரவெடி விளக்கம்..!

Published : Oct 05, 2020, 04:56 PM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் கூறுவது என்ன? அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி சரவெடி விளக்கம்..!

சுருக்கம்

அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதையே டுவிட்டர் பதிவு மூலம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சூசமாக தெரிவித்திருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதையே டுவிட்டர் பதிவு மூலம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சூசமாக தெரிவித்திருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தகவல் மற்றும் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ;- செயற்குழு கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டன. தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது. அது எல்லாம் வெளிவரவில்லை. அது போன்று முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வியே அங்கு எழவில்லை. வெளியில் தவறான கருத்துக்கள் பரப்பபட்டுள்ளது. 

அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதையே டுவிட்டர் பதிவு மூலம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சூசமாக தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் கழக ஒருங்கிணைப்பாளர் என்பதால் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் சந்திப்பது வழக்கமான ஒன்று தான். இதில் அரசியல் எதுவும் இல்லை. இதனை அரசியலாக்கி பார்க்கின்றவர்களுக்கு அரசியலாக தெரியும்.

மேலும், பேசிய அவர் வரும் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் பற்றி அறிவிப்பது பற்றி தலைமை கழகம் தான் தெரிவிக்கும். கொரோனா காலம் என்பதால் திரையரங்கு மூடப்பட்டு இருப்பதால் தயாரிப்பாளர்களின் பொருளதாரத்தின் அடிப்படையில் சில படங்கள் மட்டும் ஓ.டி.டியில் வெளியாகி உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

TN Politics: இந்தியா கூட்டணி கூட்டத்தை கைகழுவிய திமுக! அறிவாலயம் முடிவுக்கு பின்னணியில் கமலாலயம்? பரபரப்பு தகவல்!
TVK vs DMK: புறக்கணித்த மேயர்... புறந்தள்ளிய எம்.எல்.ஏ! அரசு விழாவில் அரங்கேறிய பனிப்போர்! சென்னையில் அரங்கேறும் ‘ஈகோ’ யுத்தம்!