ஜெயலலிதா மரண விவகாரம்... பிப்ரவரி 1-ம் தேதி முக்கிய சாட்சி ஆஜர்..!

Published : Jan 30, 2019, 03:17 PM ISTUpdated : Jan 30, 2019, 03:20 PM IST
ஜெயலலிதா மரண விவகாரம்... பிப்ரவரி 1-ம் தேதி முக்கிய சாட்சி ஆஜர்..!

சுருக்கம்

ஓபிஎஸ் வருகிற 1-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார். ஜெயலலிதா மரணம் விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் சாட்சியம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பல முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 1-ம் தேதி ஆஜராகிறார். 

கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் கவனித்து வந்த துறைகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதனையடுத்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 

பின்னர் அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம் காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிவந்தார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை ஏற்று விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை முன்னாள் தலைமைச் செயலாளர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் சில அமைச்சர்களுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராக இருந்த நிலையில், ஓபிஎஸ் வருகிற 1-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார்.

ஜெயலலிதா மரணம் விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் சாட்சியம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பல முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!
விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!