ஓ.பன்னீர்செல்வம் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு... புறப்பட்ட சில நிமிடங்களில் அவசரமாக தரையிரக்கம்..!

By vinoth kumarFirst Published Jan 14, 2020, 10:55 AM IST
Highlights

சென்னை விமான நிலையத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்லம் மதுரை செல்ல வந்தார். அப்போது அதிமுக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,’உலகம் முழுவதும் தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 149 பயணிகளுடன் சென்ற விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை விமான நிலையத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்லம் மதுரை செல்ல வந்தார். அப்போது அதிமுக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,’உலகம் முழுவதும் தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இதையும் படிங்க;-  முதல்வர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..!

பின்னர், மதுரை செல்லும் தனியார் விமானத்தில் துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 149 பயணிகள் இருந்தனர். விமானத்தை நடைமேடையில் இருந்து ஒடுபாதைக்கு விமானி கொண்டு சென்றார். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். இது தொடர்பாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து,  இது பற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் உட்பட பயணிகள் அனைவரும் 2 மணி நேரமாக விமானத்திலே அமர்ந்திருந்தனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு 8.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. 

click me!