நாட்டுக்கு விரோதமா கோஷம் போட்டீங்கன்னா !! தூக்கி உள்ள போட்டுருவோம் !! அமித் ஷா எச்சரிக்கை ...

By Selvanayagam PFirst Published Jan 14, 2020, 10:36 AM IST
Highlights

தேச விரோத கோஷங்களை எழுப்பவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்தார்.
மத்திய பிரதேசம் போபாலில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பெரும் கூட்டம் நடைபெற்றது. 

இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: சில மாணவர்கள் தேச விரோத கோஷங்களை எழுப்புகிறார்கள்.  

தேச விரோத கோஷங்களை எழுப்பவர்கள் சிறை கம்பிக்கு பின்னால் அனுப்பப்படுவார்கள். ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜியால் குடியுரிமை திருத்த சட்டத்தில் இந்தியர்களின் குடியுரிமை பறிக்கபடுவதாக எந்தவொரு விதிமுறையாவது குறிப்பிட்டு சொல்ல முடியுமா?காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தேசத்தை தவறாக வழிநடத்துகின்றன மற்றும் சிறுபான்மையினரை தூண்டி விடுகின்றன. 

பிரிவினைக்கு பிறகு மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானில் 30 சதவீதம் இந்துக்கள் இருந்தனர். ஆனால் இன்று பாகிஸ்தானில் வெறும் 3 சதவீதமும், கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) 7 சதவீதம் மட்டுமே இந்துக்கள் உள்ளனர். 

அங்கு இருந்த இந்து, சீக்கிய மற்றும் சிந்தி சகோரர்கள் எங்கு போனார்கள்? வங்கதேச மீனவர்கள் மறைந்து விட்டார்கள்? என கண் தெரியாத மற்றும் காது கேட்காத காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்கிறேன்.


அவர்கள் எல்லோரும் இந்திய குடிமகன்கள். அவர்கள் எப்போது இங்கே வரவிரும்பினாலும் அவர்கள் வரவேற்கப்படுவார்கள் என மகாத்மா காந்தி கூறினார். அப்புறம் பிரதமர் நேருவும் அவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார். 

ஆனால் காங்கிரஸ் தனது வாக்குறுதியிலிருந்து விலகி ஒடுகிறது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் காங்கிரஸ் எதிர்க்கிறது. 

தவறான பாதையிலிருந்து திரும்புங்கள் என காங்கிரசை வலியுறுத்துகிறேன். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் நீங்கள் முற்றிலும் அழிக்கப்படுவீர்கள். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

click me!