சோனியா அழைத்தும் புறக்கணித்த திமுக..! கூட்டணியில் சடுகுடு ஆட வைத்த அழகிரி.. பரபர பின்னணி..!

By Selva KathirFirst Published Jan 14, 2020, 10:21 AM IST
Highlights

சட்டமன்ற தேர்தலில் ஆளுக்கு ஒரு கணக்கு போட்டு வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் கூட திமுக இல்லாத ஒரு கூட்டணி எப்படி இருக்கும் என்கிற ஆலோசனையில் இருப்பதாக சொல்கிறார்கள். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் ரஜினி தரப்பிடம் கூட்டணி குறித்தும் அரசியல் நிலவரம் குறித்தும் காங்கிரஸ் தரப்பில் இருந்து பேசியதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் ரஜினிக்கு நெருக்கமான ஒருவரிடம் இது குறித்து பேசியதாக கடந்த மாதமே தகவல்கள் வெளியாகின.

கூட்டணி தர்மம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கை மட்டும் அல்ல கூட்டணி தொடர்பாக ரஜினி தரப்புடன் காங்கிரஸ் பேசியதும் தான் திமுகவின் எரிச்சலுக்கு காரணம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் ஆளுக்கு ஒரு கணக்கு போட்டு வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் கூட திமுக இல்லாத ஒரு கூட்டணி எப்படி இருக்கும் என்கிற ஆலோசனையில் இருப்பதாக சொல்கிறார்கள். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் ரஜினி தரப்பிடம் கூட்டணி குறித்தும் அரசியல் நிலவரம் குறித்தும் காங்கிரஸ் தரப்பில் இருந்து பேசியதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் ரஜினிக்கு நெருக்கமான ஒருவரிடம் இது குறித்து பேசியதாக கடந்த மாதமே தகவல்கள் வெளியாகின.

இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த திமுக, ரஜினியுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்க கூடாது என்கிற விதமாகத்தான் கமலை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்தது. ரஜினி, கமல், காங்கிரஸ், விஜயகாந்த், பாமக என பிரமாண்ட கூட்டணி உருவாகும் பட்சத்தில் திமுகவிற்க மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும். இதனால் தான் கமலை திமுக நிர்வாகிகள் நேரடியாக சென்று சந்தித்து தங்கள் போராட்டத்திற்கு அழைத்தனர். இதில் கலந்து கொள்ளும் முடிவில் இருந்த கமல் கடைசி நேரத்தில் கழன்று ஓடினார்.

இப்படி தமிழக அரசியலில் புதிய கூட்டணி கணக்கு போடப்பட்ட நிலையில் திமுகவின் கூட்டணி தர்மத்தை கடுமையாக விமர்சித்து கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டார். இதன் மூலம் திமுக தலைமை மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தான் டெல்லியில் சோனியா தலைமையில் எதிர்கட்சிகளின் ஆலோசனை நடைபெற்றது. இதில் திமுக பங்கேற்க வேண்டும் என்று சோனியா நேரடியாக தொலைபேசியில் ஸ்டாலினை தொடர்பு கொண்டு அழைத்திருந்தார்.

இதனை ஏற்று டி.ஆர்.பாலுவை டெல்லிக்கு ஸ்டாலின் அனுப்பினார். ஆனால் கே.எஸ்.அழகிரியின் கூட்டணி தர்ம அறிக்கை மற்றும் ரஜினியுடனான கூட்டணி பேச்சு போன்ற தகவல்களால் அதிருப்தியில் இருந்த திமுக கடைசி நேரத்தில் சோனியா கூட்டத்தை புறக்கணித்துள்ளது. இதனால் தமிழக அரசியலில் மட்டும் அல்லாமல் தேசிய அரசியலிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

click me!