
நிச்சயம் அம்மாவின் ஆட்சி தொடரும். மாற்று கட்சி எதிர்கட்சி ஆதரவு இல்லாமல் நாம் ஆட்சி அமைப்போம் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
கிரீன் வேஸ் சாலையில் செம்மலையை வரவேற்று பின்னர் பேசிய அவர் கூறியதாவது :
அம்ம்மா வின் ஆன்மா இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. அம்மாவின் ஆன்மா நமது நாட்டையும் நாட்டு மக்களையும் உறுதியாக காப்பாற்றி நல்வழிப்படுத்தும் என்பதை அதிமுக வை சேர்ந்த மூத்த முன்னோடிகளுக்கும் பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
அம்மாவின் நல்லாட்சித்தான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. அம்மாவின் நல்லாட்சி தொடர்ந்து நடைபெறும். அம்மாவின் கொள்கைக்களை கோட்பாடுகளை அவர் வழியில் செயல்படும் அரசு வழிநடத்தும்.
முழுவதுமாக சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் அம்மாவின் ஆட்சி தொடரும். அம்மாவின் வழியில் நல்லாட்சி நடக்கும் இடத்தில் அமைதியை நிலை நாட்டுவது முக்கியம் ஆகும்.
நமது நோக்கம் நல்லாட்சி நிலை நாட்டுவதாகும். அமைதியை நிலை நாட்ட வேண்டும். வெளியூர்களிலிருந்து வந்து பொதுமக்கள் , தொண்டர்கள் நல்லாதரவை அளித்தீர்கள். அனைவரும் அமைதி காக்கவும்.
மாற்று கட்சி , எதிர்கட்சி யாருடைய ஆதாரவு இல்லாமல் நல்லாட்சி அமையும். அப்படி அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இரண்டாவது முறையாக மக்கள் வாய்ப்பு தந்தார்கள். மாண்புமிகு அம்மாவின் ஆன்மா நம்மை வழி நடத்திகொண்டிருக்கிறது என்பதற்காகத்தான் இந்த நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. ஆகவே தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் , இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.