பன்னீர் மகன் மத்தியமைச்சராகிறார்!: டெல்லியில் கில்லியாய் அரசியல் செய்யும் ஓ.பி.எஸ்...

By sathish kFirst Published May 23, 2019, 4:09 PM IST
Highlights

2019 நாடாளுமன்ற தேர்தல் போல் விநோதமான ஒரு தேர்தலை இந்த தேசம் சந்தித்திருக்கவே செய்யாது. அந்தளவுக்கு கூட்டணி  முதல் வாக்கு எண்ணிக்கை வரை கொத்துக் கொத்தான அதிர்ச்சிகள், ஆச்சரியங்கள், விநோதங்கள், விளையாட்டுகள். 

2019 நாடாளுமன்ற தேர்தல் போல் விநோதமான ஒரு தேர்தலை இந்த தேசம் சந்தித்திருக்கவே செய்யாது. அந்தளவுக்கு கூட்டணி  முதல் வாக்கு எண்ணிக்கை வரை கொத்துக் கொத்தான அதிர்ச்சிகள், ஆச்சரியங்கள், விநோதங்கள், விளையாட்டுகள். 

தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் இறுதியான, உறுதியான முடிவுகள் வராத நிலையில், குறைந்தது 35 எம்.பி.க்கள் தி.மு.க.வின் கூட்டணி சார்பாக டெல்லி செல்கின்றனர். ஆனால் இவர்கள் ‘நாடாளுமன்ற உறுப்பினர்கள்’ எனும் நிலையை தாண்டி வேறெந்த உச்சத்துக்கும் போவதற்கான சாத்தியமே இல்லை. 

ஆனால், ஜஸ்ட் ஒன்று அல்லது ரெண்டு எம்.பி.க்களை மட்டுமே பெற வாய்ப்புடைய அ.தி.மு.க.விலிருந்து நிச்சயம் ஒரு மத்தியமைச்சர் உருவாக இருக்கிறார். அவர் வேறுயாருமில்லை, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தான். தேனி தொகுதியில், வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு வாரம் முன்பாகவே ‘தேனி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர்’ என்று கல்வெட்டுக்கு வைக்குமளவுக்கு கெத்து காட்டிய அதே ரவிதான்.

பன்னீர் மீது அநியாய பாசத்திலிருக்கிறது பி.ஜே.பி. என்னதான் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து அக்கட்சி மிக மோசமான தோல்வியை தழுவினாலும் கூட, பன்னீரின் விசுவாசத்துக்கு பி.ஜே.பி.யில் பெரிய மரியாதை இருக்கிறது. அதிலும் வாரணாசியில் மோடியின் பிரசார ஊர்வலத்தில் அவர் கலந்து கொண்டு காவி முகம் காட்டியதெல்லாம் பன்னீர் பி.ஜே.பி.யில் இணைகிறாரா? எனும் கேள்வியையே எழுப்பியது நினைவிருக்கலாம். 

எனவே ஜெயிக்கும் பட்சத்தில் நிச்சயமாக பன்னீரின் மகன் ரவீந்திரநாத் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்பது உறுதி! என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். அதேபோல் பா.ம.க.விலிருந்து டெல்லிக்கு செல்லும் ஒரேயொரு லோக்சபா எம்.பி.யான அன்புமணிக்கும் மத்திய இணையமைச்சர் பதவியை பெற்றுத் தருவதில் அவரது அப்பா டாக்டர் ராமதாஸ் முழு முயற்சியில் இருக்கிறார் என்கிறார்கள். 

ஹும் பன்னீர் குடும்பத்துக்குதான் அதிர்ஷ்டம் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. அப்பா தமிழத்தின் துணை முதல்வர். மகனோ, தேசத்தின் மத்திய இணையமைச்சர். 
கலக்குறீங்க பன்னீரு!

click me!