ராணுவ விமானம் விவகாரம்... 365 நாட்களுக்கு பிறகு நிர்மலா சீதாராமனை சந்தித்த ஓபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Jul 23, 2019, 12:48 PM IST
Highlights

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பல்வேறு சர்சைகளுக்கு இடையே துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார். 

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பல்வேறு சர்சைகளுக்கு இடையே துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார்.

  

தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தம்பி பாலமுருகன் உடல் நலம் குன்றி இருந்த போது மதுரையிலிருந்து சென்னைக்கு ராணுவ ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்கு அழைத்து சென்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தகவலை டெல்லியில் பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளிப்படையாக தெரிவித்தார். மேலும், தனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானத்தை ஏற்பாடு செய்து தந்த நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்ததாக அவர் கூறினார். 

இதனால், கடும் கோபத்தில் இருந்து வந்த நிர்மலா சீதாராமன் ஓபிஎஸ் அப்பாயின்மென்ட்டை அதிரடியாக ரத்து செய்தார். ஆனால், மைத்ரேயன் எம்.பி.யை மட்டும் சந்தித்து பேசினார். ஒரு துணைமுதல்வரை மத்திய அமைச்சர் சந்திக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், டெல்லி சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில், தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஓபிஎஸ் சந்தித்துள்ளார். தமிழகத்தின் அரசியல் நிலவரம், 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு, வேலூர் மக்களவை தேர்தல், தமிழகத்திற்கு சேர வேண்டிய நிதி உதவி குறித்து இந்த சந்திப்பின்போது ஓபிஎஸ் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. கடந்த வருடம் ஜூலை 24-ம் தேதி துணைமுதல்வரை சந்திக்க மறுத்த நிர்மலா சீதாராமனை தற்போது அதே தேதியில் ஓபிஎஸை சந்தித்துள்ளார். 

click me!