பன்னீர்செல்வத்துக்கும் எனக்கும் கருத்து வேறுபாடா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடியார்.!

By vinoth kumarFirst Published Jun 4, 2021, 2:59 PM IST
Highlights

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசோதனை மையங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பரிசோதனை முடிவுகளை விரைவாக அறிவிப்பதன் மூலம், தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது அதிமுக என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில், இன்று ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த 9 மாவட்ட செயலாளர்களுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். இதில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, பெஞ்சமின் மற்றும் திநகர் சத்யா, விருகை ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- திமுக ஆட்சியின் போது கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பிற்கு முயற்சி செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அமைச்சர்களாக இருந்த ஜெயக்குமார், வேலுமணி ஆகியோர், ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த திட்டம் குறித்து பரிசீலனை செய்வதாக அம்மாநில முதல்வர்கள் தெரிவித்தனர். தற்போது, நதி இணைப்பிற்கு இறுதி திட்டத்தை தயாரித்த நீர்வளத்துறை அமைச்சகம், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்தது. இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்றார். 

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசோதனை மையங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பரிசோதனை முடிவுகளை விரைவாக அறிவிப்பதன் மூலம், தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டன. அதில், இப்போது வரை மாற்றம் இல்லை என கூறியுள்ளார். 

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துடன் எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை. நல்ல நாள் என்பதால், சென்னையில் இன்று அவர் புதிய வீட்டில் குடியேறுகிறார். இதற்காக கிரக பிரவேச நிகழ்ச்சி நடப்பதால், அவர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நல்ல நாள் என்பதால், நான் வந்துள்ளேன் என்றார். 

click me!