
இரட்டை இலை சின்னம் இபிஎஸ் ஒபிஎஸ் அணிக்கு தான் சொந்தம் என நேற்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது
பிரமாண பத்திரங்கள்,எம்எல்ஏக்கள்,எம்பிக்களின் ஆதரவுகளின் அடிப்படையில் இந்த முடிவை எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, காலியாக இருந்த ஆர்கே நகர் இடைதேர்தல் நடப்பதாக இருந்தது.பின்னர் உட்கட்சி பூசல் காரணமாக தினகரன் அணிக்கும் ஒபிஎஸ் அணிக்கும் இடையே இரட்டை இலை சின்னம் பெறுவதில் கடும் போட்டி நிலவி வந்ததால்,கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்
பின்னர் இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது.நீண்ட நாட்களாக நடந்து வந்த பெரும் இழுப்பறிக்குபின், இன்று இரட்டை இலை சின்னம் யாருக்கு என ஒரு முடிவுக்கு வந்தது
டிடிவி தினகரன் அணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு,OPS EPS அணியின் கோரிக்கையே ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது
இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் சட்டப்படி சொந்தம் என தொடர்ந்து சொல்லி வந்த தினகரன் அணி ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டை இலை சின்னம் இபிஎஸ்- ஒபிஎஸ் க்கு தான் சொந்தம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதற்கு தினகரன் தரப்புலிருந்து மேல்முறையீடு செய்யப்போவதாக நேற்று தெரிவித்தனர்.ஆனால்
டிடி வி தினகரன் நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கு முன்பாகவே ஒ.பி.எஸ் உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலை சார்பாக கேவிட் மனு தாக்கல் செய்தார்.
கேவிட் மனு தாக்கல் செய்வதால் இரட்டை இலை சின்னத்தை பற்றி யார் வழக்கு தொடர்ந்தாலும் அது தொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பினரிடம் பரிசீலனை செய்த பின்பு முடிவெடுக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது
இதனால் தினகரன் அணிக்கு இது ஒரு பின்னடைவாக இருக்கும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்