தினகரனின் கட்டளையால் கலங்கி நிற்கும் பழனியப்பன்...

By sathish kFirst Published Aug 10, 2019, 11:27 AM IST
Highlights

தினகரன் போட்ட உத்தரவால் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பயங்கர அப்செட்டில் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

அமமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பனின் மகள் யாழினிக்கும், கரூர் பாலாஜி தியேட்டர் உரிமையாளர் டாக்டர்.விஜயானந்த்க்கும் ஆகஸ்ட் 12ஆம் தேதி தினகரன் தலைமையில் கல்யாணம் நடக்க உள்ளது. இதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் வேலையை பழனியப்பன் ஒரு மாதத்திற்கு முன்பே ஆரம்பித்து செய்து வருகிறார்.

பழனியப்பன் அமமுகவில் இருந்தாலும் சமுதாய ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் அமைச்சர்கள் உள்பட அவருடைய பல நண்பர்கள் அதிமுகவில் உள்ளனர். பழனியப்பனின் மகள் திருமணத்திலோ அல்லது வரவேற்பிற்கோ நட்பின் அடிப்படையில் அதிமுகவிலிருந்து சில, MLAக்களும், அமைச்சர்களும் வருவதாக இருந்தனர். அதில் ஒரு சிலர் பழனியப்பனை நேரடியாகவே தொடர்புகொண்டு திருமண வேலைகள் எப்படியிருக்கிறதும் என்று விசாரித்துள்ளனர். 

இதுபோலவே பழனியப்பனும் கட்சி வேறு, நட்பு வேறு என்பதன் அடிப்படையில் மகள் திருமணத்திற்கு அனைவரையும் அழைக்கவேண்டும் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தார். சில அதிமுக விஐபிக்களுக்கு அழைப்பிதழ் அளிக்க வேண்டுமென பழனியப்பன் குடும்பத்தினரே அவரிடம் சொல்கிறார்களாம். அதேபோல பழைய நண்பர்களான கரூர் செந்தில் பாலாஜி, ஆண்டிபட்டி தங்க தமிழ் செல்வன் உள்ளிட்ட சிலரையும் அழைக்கலாம் என பிளான் போட்டாராம். 

பழனியப்பனின் இந்த பழைய நண்பர்களை அழைக்கும் பிளானை தெரிந்துகொண்ட தினகரன்.கடந்த 4ஆம் தேதி நடந்த அமமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தினகரன், நமது இயக்கத்தைச் சேர்ந்த எத்தனையோ பேர் ஆளும்கட்சிக்காரர்கள் வீட்டுத் திருமணங்களுக்குச் செல்வதும், அமைச்சர்களுடன் சுமூகமாக உறவு வைத்துக்கொண்டும் இருக்கின்றனர். நமக்கு எப்படி திமுக எதிரியோ, அப்படி இந்த துரோகிகளையும் ஒரு கை பார்க்க வேண்டும். அமைச்சர் பத்திரிகை கொடுத்ததால் சென்றோம் என காரணம் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இரு தரப்பினரிடமும் உறவுகள் வைத்துக்கொள்ளக்கூடாது. கல்யாணம், காதணி விழா என்று யாரும் கலந்துகொள்ளக்கூடாது. நாமும் அழைக்கக்கூடாது என்று பழனியப்பனை மனதில் வைத்தே இதை சொன்னாராம். 

மகள் திருமணத்திற்கான அனைவருக்கும் பத்திரிகைகள் வைத்து வரும் வரவேற்க தயாராக இருந்த பழனியப்பனுக்கு, தினகரனிடமிருந்து இப்படி ஒரு அறிவிப்பு வந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லையாம். இதுகுறித்து தனது நெருக்கமானவர்களிடம், அதிமுகவில் உள்ள பழைய நண்பர்களை அழைக்கவே கூடாது என்பதற்காகத் தான் தினகரன் இப்படியான ஒரு உத்தரவை போட்டிருக்கிறார் என தனது நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.

click me!