
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட தினகரன் சுமார் 4500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு இரட்டை இலையை இழந்து தனித்துவிடப்பட்ட தினகரன், ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டார். தனக்கு ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்று இரட்டை இலையை மீட்பேன் என தினகரன் சூளுரைத்தார்.
ஆர்.கே.நகரில் பரஸ்பரம் குற்றம்சாட்டி அதிமுகவும் தினகரனும் வாக்கு சேகரித்தனர். ஆர்.கே.நகரில் பதிவான 77.5% வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட தினகரன் சுமார் 4500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
இந்நிலையில், தினகரன் முன்னிலை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், பொங்கலுக்குள் முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ளார். மேலும் ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றவுடன் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தினகரன் அணிக்கு வந்துவிடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.