இப்போ சின்ன மீன்... அடுத்து விலாங்கு மீன்... எரிமலையாய் வெடிக்கும் எடப்படி பழனிசாமி... சசிகலா ஆடியோ தாண்டவம்.!

Published : Jun 09, 2021, 04:12 PM IST
இப்போ சின்ன மீன்... அடுத்து விலாங்கு மீன்... எரிமலையாய் வெடிக்கும் எடப்படி பழனிசாமி... சசிகலா ஆடியோ தாண்டவம்.!

சுருக்கம்

முதலில் சின்ன  மீனை பிடிப்போம், அதன் பிறகு விலாங்கு மீனை பார்க்கலாம் என அடி  போடுகிறாராம் சசிகலா. அவரது கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா என அதிமுகவினர் அங்கொன்றும், இங்கொன்றும் கால் வைத்து வருகின்றனர். 

அடுத்தடுத்து தொண்டர்களிடம் பேசி சசிகலா வெளியிட்ட ஆடியோக்களால் ஆடிப்போய்க்கிடக்கிறது அதிமுக வட்டாரம். சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஆனந்திடம் சசிகலா பேசிய ஆடியோ, இதுவரை மவுனம் காத்த அதிமுக புள்ளிகளை ஆத்திரப்படுத்தி உள்ளது. 

சசிகலா அமமுக நபர்களிடம் பேசி நலம் விசாரிக்கிறார். அவர் அதிமுக நபர்களுடன் பேசவில்லை. அவரால் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்று சொன்னார் எடப்பாடி. திருடன் ஒரு இடத்தில் திருடச் சென்றால் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்வான் என்று போலீஸ்காரர்கள் உறுதியாக சொல்வார்கள். அதேபோல ஒரு அரசியல்வாதி மற்றொரு அரசியல்வாதிக்கு சவால்விடும்போது, ஏதாவது ஒரு பாயின்ட்டை தன்னை அறியாமல் எடுத்து கொடுத்துவிடுவார். அதை தான் எடப்பாடி செய்துள்ளதாக அமமுகவினர் சொல்லி சிரிக்கின்றனர். 

அதாவது, சில நாட்களுக்கு முன்னதாக, சசிகலா, அதிமுக நிர்வாகிகள்  யாருடனும் பேசவில்லை என்று எடப்பாடி குரலை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி கூறினார். அடுத்த நாள் வந்த ஆடியோ... எடப்பாடி நெஞ்சில் எரிமலையாக வெடித்ததாக சொல்கிறார்கள். அதாவது, நெல்லை அதிமுக நிர்வாகியுடன் சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ வெளியாகி விட்டது. நெல்லையைச் சேர்ந்த 2 பேரிடம்  பேசிய ஆடியோ ரிலீஸானதன் மூலம் அதிமுக நிர்வாகிகளுடன் தான் சசிகலா பேசுகிறார் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

அவர் சிறையில் இருந்த போது அமமுகவினர் துவங்கிய கட்சிக்கு நெல்லையில் பலத்த ஆதரவு இருந்தது. அப்போது அதிமுகவினருக்கு அமமுகவினர் சவால் விடுத்து கூட்டுறவு சங்கங்களில் பல பதவிகளை கைப்பற்றியது. பின்னாளில் அவர்கள் அதிமுகவில் ஐக்கியமானாலும், தேர்தலில் டிக்கெட் கிடைக்காத நெல்லை மாவட்டத்தினர் பலரும்  சசிகலா நம்மிடம் பேசுவார்களா? என தவம் கிடக்கிறார்களாம். அதனால் தான்  எடப்பாடிக்கு பதிலுக்கு போட்டியாக நெல்லை அதிமுக பிரமுகர்களை சசிகலா தொடர்பு கொண்டு எடப்பாடியாருக்கு ஷாக் கொடுத்டு வருகிறார்.

 

முதலில் சின்ன  மீனை பிடிப்போம், அதன் பிறகு விலாங்கு மீனை பார்க்கலாம் என அடி  போடுகிறாராம் சசிகலா. அவரது கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா என அதிமுகவினர் அங்கொன்றும், இங்கொன்றும் கால் வைத்து வருகின்றனர். இப்போது முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி அதிமுக தரப்பை ஆத்திரப்படுத்தி இருக்கிறது.              
 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை