ஜெ.யின் ரத்தத்தை உறிஞ்சி குடித்த ஓநாய் கும்பல்; வளர்மதி, ஜெயக்குமார் ஆவேச பேச்சு!

Asianet News Tamil  
Published : Sep 16, 2017, 01:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
ஜெ.யின் ரத்தத்தை உறிஞ்சி குடித்த ஓநாய் கும்பல்; வளர்மதி, ஜெயக்குமார் ஆவேச பேச்சு!

சுருக்கம்

Pa Valarmathi Jayakumar Aggressive Speech!

ஜெயலலிதாவின் ரத்தத்தை உறிஞ்சி குடித்த ஓநாய் கும்பல், இன்று ஆட்சியை அபகரிக்க துடிப்பதாக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய, அமைச்சர் ஜெயக்குமார்,   மாபியா கும்பல் இன்று 2ஜி ஊழல் கும்பலோடு கை கோர்த்துள்ளது என்றார்.

திமுக உடன் உடன்பாடு வைத்துக்கொள்வது தவறல்ல என்று தினகரன் கூறுகிறார். அதை தொண்டர்கள் யாரும் மன்னிக்க மாட்டார்கள். 

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில்  நிழல் ஆட்சி மையம் அமைத்து அ.தி.மு.க.வினரிடையே அவப்பெயரை சம்பாதித்த கும்பல்  மன்னார்குடி கும்பல் என்று குறிப்பிட்டார். 

முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியதாவது, எடப்பாடியின் ஆட்சியை மக்கள் ரசிக்கிறார்கள். சில மனநோயாளிகளுக்கு தான் பிடிக்கவில்லை.

அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் திமுகவோடு சென்றதுண்டா? இப்போது திமுகவுடன் சென்றவர்கள் தான் துரோகத்தின் மொத்த வடிவம் என்று கூறினார்.

மறைந்த ஜெயலலிதாவின் ரத்தத்தை உறிஞ்சி குடித்த ஓநாய் கும்பல் இன்று ஆட்சியை அபகரிக்க துடிக்கிறார்கள் என்று பா. வளர்மதி ஆவேசமாக பேசினார்.

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!