நெல்லை கண்ணன் என்ன தீய செயலை செய்தார்..? 14 நாட்கள் சிறை ஏன்..? ப. சிதம்பரம் பொளேர்!

By Asianet TamilFirst Published Jan 3, 2020, 10:21 PM IST
Highlights

“பேசினாலே குற்றம் என்ற புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்? இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் (Hyde Park) என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும். பேச்சும் செயலும் இணைந்தால்தான் குற்றம்." 

பேசினார் என்பதற்காக நெல்லை கண்ணனை ஏன் 14 நாட்கள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதூறாக விமர்சித்ததாக நெல்லை கண்ணனை போலீஸார் கைது செய்தனர். அவரை ஜனவரி 13ம் தேதி வரையில் சிறையில் அடைக்க நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நெல்லை கண்ணன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் நெல்லை கண்ணன் கைது தொடர்பாக ட்விட்டர் பதிவு இட்டுள்ளார்.


 அதில், “பேசினாலே குற்றம் என்ற புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்? இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் (Hyde Park) என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும். பேச்சும் செயலும் இணைந்தால்தான் குற்றம். நெல்லை கண்ணன் பேசினார் என்று வைத்துக்கொள்வோம், என்ன தீய செயலை அவர் செய்தார்?” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

click me!