
இடைத்தேர்தல் என்றாலே பணபலம், அதிகார பலம், போலீஸ் பலம்தான் அதிகமாக எதிரொலிக்கும் என்பதால், அதைவைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்று முன்னால் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பெங்களூரில், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் , தற்போது தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது என்றார்.
எனவே, இந்த ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடிக் கொண்டிருகின்றனர்.
அதிமுக கட்சியில் உள்ள 130 எம்.எல்.ஏ.,க்களும் இன்னும் 4 ஆண்டு காலம் எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஒற்றுமையாக இருந்தால்தான் இதைக் காப்பாற்ற முடியும் என்பதற்காக அவர்கள் போராடுகிறார்கள். இல்லையெனில் அந்தக் கட்சி தானாக கவிழ்ந்துவிடும். எனவே, ஆட்சியைக் காப்பாற்றுவது மிகக் கடினம்.
அதிமுக அரசுக்கு, மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருப்பதால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அது வெற்றிபெறும் என்று சொல்ல முடியாது.
இடைத்தேர்தல் என்றாலே பணபலம், அதிகார பலம், போலீஸ் பலம்தான் அதிகமாக எதிரொலிக்கின்றன. அதை வைத்துத்தான் முடிவுகளும் இருக்கும்.
ஆனால் உள்ளாட்சித் தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ வந்தால் தான் மக்களுடைய உண்மையான முடிவு வெளிப்படும்.
அதிமுக பிரிந்திருப்பதால், அது திமுக-வுக்கு சாதகமாக இருக்குமா என்பதைப் பற்றி நான் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.