"ஆர்.கே.நகரில் தீபா வெற்றி பெற்று முதல்வராவார்" - கனவு கண்டது போல் பேசிய மாதவன்!

Asianet News Tamil  
Published : Apr 03, 2017, 05:08 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
"ஆர்.கே.நகரில் தீபா வெற்றி பெற்று முதல்வராவார்" - கனவு கண்டது போல் பேசிய மாதவன்!

சுருக்கம்

deepa will be new cm says madhavan

அடியே என்று அழைக்க ஆம்புடையானே இல்லையாம், அதற்குள் பிறக்கப்போகும் குழந்தைக்கு பேச்சிமுத்து என்று பெயர் வைத்தாளாம் ஒருத்தி.

அந்த கதையாக, ஆர்.கே.நகரில் தீபா டெபாசிட் வாங்குவாரா என்பதே சந்தேகமாக உள்ள நிலையில், அவர் வெற்றிபெற்று முதல்வராவார் என்று கூறி இருக்கிறார் அவரது கணவர் மாதவன்.

ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமானவர்  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. படகு சின்னத்தில் போட்டியிடும் அவர், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மதுசூதனன் மற்றும் தினகரனுக்கு முன்னால் அவருக்கு வெற்றி என்பது சாத்தியம் இல்லை. ஆனால் கணிசமான வாக்குகளை பிரிப்பார் என்றே சொல்லப்படுகிறது.

முன்னதாக, தீபாவின் கணவர் மாதவனின் செயல்பாடுகள்,  அவருக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தலில்  போட்டியிடும் தீபாவுக்கு, பிரச்சாரம் செய்ய இருப்பதாக தாமாக முன்வந்து கூறியுள்ளார் மாதவன். 

மேலும், தீபா ஐம்பது ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

தீபா வெற்றி பெற்றதும் தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்கள் தீபாவின் பக்கம் வருவார்கள். பின்னர் அவர்களது ஆதரவுடன் தீபா முதல்வராக பதவியேற்பார் எனவும் கனவு கண்டது போல கூறி உள்ளார். 

அத்துடன், தமது புதிய கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், சசிகலா தலைமையை விரும்பாத அதிமுகவினர் தங்கள் கட்சியில் சேரலாம் எனவும்  மாதவன் அழைப்பு விடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!