தமிழகத்தில் 5 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம். சாதித்து காட்டிய உதயநிதி.. மார்தட்டும் அமைச்சர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Jun 15, 2021, 12:51 PM IST
Highlights

தமிழகத்தில் 5 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் எல்&டி தனியார் நிறுவனம் மூலம் அமைக்க உதயநிதி மூலம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. இன்று துவங்கப்பட்ட ஆக்சிசன் உற்பத்தி மையம் சுமார் 1.5 கோடி மதிப்பில் துவங்கப்பட்டுள்ளது. 

கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறிகள் தெரிந்த உடனே நோயாளிகள் மருத்துவமனைக்கு வரவேண்டும் எனவும், கொஞ்சம் கூட தாமதிக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். 

சென்னை ராயப்பேட்டை அரசு  மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சேபாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் உடன் இருந்தனர். பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 

தமிழகத்தில் 5 இடத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் எல்&டி தனியார் நிறுவனம் மூலம் அமைக்க உதயநிதி மூலம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. இன்று துவங்கப்பட்ட ஆக்சிசன் உற்பத்தி மையம் சுமார் 1.5 கோடி மதிப்பில் துவங்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் இதே மதிப்பில் துவங்கப்பட உள்ளது. மேலும் இந்த ஆக்சிஜனை உற்பத்தி நிலையம் மூலம் காற்றில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும், இது ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. முதல் அலையில் சாதாரண படுக்கைகளே போதுமானதாக இருந்தது. இரண்டாவது அலையில் அனைவருக்கும் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தேவைப்பட்டது.

மேலும் 70 ஆயிரம் புதிய ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை முதல்வர் உத்தரவின் பேரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த படுக்கைகள் நிரந்தரமாக இருக்கும். 3 வது அலையில் குழந்தைகள் அதிகளவு  பாதிக்கப்படுவது உறுதிபடுத்தப்படாத செய்தி என்றாலும் அனைத்து அரசு பொது மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டுகளும் திறந்திருக்கும். தமிழகத்தில் கருப்பு புஞ்சை பாதிப்பு உள்ளது, கருப்பு பூஞ்சை நோய்கான அறிகுறி தெரிந்த உடனே நோயாளிகள் மருத்துவமனைக்கு வர வேண்டும்,  கொஞ்சம்கூட தாமதிக்க வேண்டாம் என்று கூறினார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு  பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கும் மட்டுமே அரசு உதவி செய்யும், உலக நாடுகளிடையே டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணித்திட விமான நிலையங்களில் பரிசோதனை தீவிரப்படுத்தப்படும். மேலும் இதற்கான மருந்துகள் கையிருப்பில் உள்ளது என்றும் கூறினார். மேலும் கருப்பு பூஞ்சை நோய்கு  45 ஆயிரம் மருந்துகள் தேவை படுகிறது என்றும் இதுவரை 11 ஆயிரம் மருந்துகள் வந்துள்ளது, அதில் 4 ஆயிரம் மருந்துகள் கையிறுப்பில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

 

click me!