
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு மாஸ்டர் ப்ளான் ரெடியாக உள்ளது என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
'கழகங்கள் இல்லா தமிழகம், கவலையில்லா தமிழகம்' - தமிழகம் முழுவதும் சுவர்களில் எழுதி பாஜகவின் புதிய பிரச்சார கோஷம் போட்டு வருகிறது பஜக. "கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்த பல பிரச்சினைகள், சிக்கல்களுக்கு இந்த இரண்டு கழகங்கள் மட்டுமே காரணம். அதனால், இரண்டு கழகங்கள் இல்லாத ஆட்சி அமைந்தாலே கவலையில்லாத தமிழகம் அமைந்துவிடும். அந்த ஆட்சி அமைக்கவே பாஜக விரும்புகிறது. திராவிட கழகங்களுக்கு மாற்று என்றும், இந்த கழகங்களுக்கு என்றும் ஒன்றுதான். இந்த இரண்டுக்கும் மாற்று பாஜகதான் என்பதை புரிய வைக்கவே தமிழகம் முழுவதும் சுவர் விளம்பரம் செய்தார்கள்". தமிழகத்தில் காலூன்றுவதற்காக சரியான திசையில் காய்களை நகர்த்தி வருவதாக சிலரும், சாத்தியமில்லாத ஒன்றைக் கனவு காண்பதாக பல்வெறு தரப்பினர் கடுமயாக விமர்சித்து வருகின்றனர்.
திராவிட இயக்கங்கள் இல்லாத தமிழகம் வேரோடு கிள்ளி எறிய வேண்டும் என்பதே, கடந்த சில மாதங்களாக காலமாக பாஜகவினர் முழக்கமிட்டு வருகின்றனர். ஜெயலலிதா இறந்ததும், கருணாநிதி ஆக்டிவாக இல்லாததையும் சாதகமாக்கிக்கொண்டு அதற்கான வியூகங்களையும் வகுக்கத் தொடங்கி விட்டதற்கான அடையாளமாகவே அமித்ஷாவின் தமிழக வருகை பார்க்கப்படுகிறது.
பாஜக வகுத்த முதல் வியூகம், தமிழகத்தில் வாக்குச்சாவடி வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, கட்சி வளர்ச்சிக்கான பணிகள் கண்காணிக்கப்படுவதாக நேர்காணலில் அமித்ஷா கூறியிருப்பது அந்தக் கருத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. அதுமட்டுமல்ல தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கான மாஸ்டர் ப்ளான் தயாராக உள்ளது என்ற அதிரடி பிரகடனத்தையும் அந்தப் பேட்டியில் வெளியிட்டுள்ளார் அமித்ஷா.
ஜெயலலிதா மரணித்ததையடுத்து பாஜகவின் செயலை இந்த நாடே பார்த்து வரும் நிலையில், பாஜகவின் இந்த முயற்சி எதிர்பார்த்ததுதான் என்றாலும், தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் அவர்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது என்கின்றனர் அரசியல் கணிப்பாளர்கள்.
ஆளும் கட்சியின் தலைமையின் மறைவை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் காலூன்ற பாஜக பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆனாலும் 50 ஆண்டுகள் திராவிடக்கட்சிகள், தமிழக மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அவ்வளவு எளிதாக போக்கிவிட முடியாது அவர்களுக்கும் தெரிந்த உண்மை.