ஒத்த செங்கல்லை வைத்தே அட்சியை பிடித்தவர்யா எங்கள் உதயநிதி.. அதிமுகவை செம்மயா வெறுப்பேற்றும் ஐ.லியோனி.

By Ezhilarasan BabuFirst Published Mar 25, 2022, 11:35 AM IST
Highlights

தாலிக்கு தங்கம் திட்டத்தை கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் இருந்தது அதிமுக அரசு. பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதை விட, கல்வி கற்க வைத்து உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி. திமுக-வின் நீதிக்கட்சி தான் பெண்களுக்கு முதலில் ஓட்டுரிமை, சொத்துரிமையை வாங்கி கொடுத்தது. தமிழகத்தில் உள்ள 21ல் 11 பெண் மேயர்கள். 

ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற சர்வாதிகார நோக்கில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், தலைமை கழக பேச்சாளருமான ஐ. லியோனி கூறியுள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மேற்கு மாவட்டம், திருவல்லிக்கேணி பகுதி சார்பில், தமிழர் எழுச்சி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, தமிழ்நாடு பாட நூல் கழக தலைவரும், தலைமை கழக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி,  உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர், திமுக-வில் பொறுமையாக உழைத்தால், பொறுப்பும் பதவியும் தாமாக தேடி வரும் என்பதற்கு நான் சிறந்த உதாரணம். 

ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக செயல்படுகிறார் உதயநிதி ஸ்டாலின். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது செங்கலை வைத்து செய்த நிகழ்வு அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் மரண அடியாக அமைந்தது. அருமையான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. 10ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை, 10 மாதங்களில் திமுக நிறைவேற்றியதோடு, நிறைவேற்றிய திட்டங்களை சட்டமன்றத்திலும் அறிவித்தார் ஸ்டாலின். ஜெயலலிதா மறைவுக்கு பின், தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ், ஜெயலலிதாவின் ஆன்மா தன்னிடம் பேசியதாக கூறி, ஆணையம் அமைக்க கோரி கூறினார். அவரது மறைவின் மர்மத்தையும் வெளிக்கொண்டு வருவார் ஸ்டாலின். 

தாலிக்கு தங்கம் திட்டத்தை கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் இருந்தது அதிமுக அரசு. பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதை விட, கல்வி கற்க வைத்து உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி. திமுக-வின் நீதிக்கட்சி தான் பெண்களுக்கு முதலில் ஓட்டுரிமை, சொத்துரிமையை வாங்கி கொடுத்தது. தமிழகத்தில் உள்ள 21ல் 11 பெண் மேயர்கள். மகளிர் சுய உதவிக்குழு கடன்களை ரத்து செய்த ஆட்சி திமுக. தங்களுக்கான உரிமையை தாங்கள் பெறமுடியாமல் இருந்த ஒரு சமூகத்தின் பெண்ணை, இன்று சென்னை மாநகராட்சியின் மேயராக்கி, வணக்கத்திற்குரிய மேயர் என்றழைக்கும்படி வைத்திருக்கிறார். 

நீட் தேர்வு விலக்களிக்காமல் பிரதமர் திருக்குறள் பேசி வருகிறார்.அதனை என்றும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரே உணவை அனைத்து மக்களும் சாப்பிட முடியுமா? ஒரு நாட்டின் உணவுக்கும், வேறு நாட்டின் உணவுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது. தமிழ் மொழியை தமிழ் மக்கள் பேசுகிற உச்சரிப்பே வித்தியாசம் உள்ளது. இந்தியா என்பது எல்லோரும் கலந்த நாடு. ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற சர்வாதிகார நோக்கில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது என்றார்.
 

click me!