" மது விற்ற பணத்தில் எங்களுக்கு அரிசியா " .? வேண்டாம்.. திமுக அரசை தாக்கிய தடா ரஹீம்.

By Ezhilarasan BabuFirst Published Mar 25, 2022, 10:48 AM IST
Highlights

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு கொடுக்க உள்ள 6,000 மெட்ரிக் டன் பச்சரிசையை பொருளாதார நெருக்கடியால் பசி பட்டினியோடு  இலங்கையில் இருந்து தமிழகம் வரும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு வழங்கலாம்

மது விற்ற வருமானத்திலோ அல்லது தடுக்கப்பட்ட வேறு எந்த வழியில் இருந்து வரும் வருமானத்திலோ நோன்பு கஞ்சி செய்து சாப்பிட நோன்பாளிகளுக்கு இஸ்லாத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது எனவே டாஸ்மாக் விற்பனையில் வரும் பணத்தில் இஸ்லாமியர்களுக்கு நோன்புக் கஞ்சிக்கு அரசு வழங்கும் பச்சரிசி இனி தங்களுக்குத் தேவையில்லை என இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்திய தேசிய லீக் கட்சியின் அன்பான கோரிக்கை..ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,000 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது  ஆனால் ஒவ்வொரு பள்ளிவாசல்களும் ஜமாத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் முஸ்லீம் வீடுகளில் நோன்பு கஞ்சி தயாரிக்க அந்தந்த ஜமாத் நிர்வாகம் வசூல் செய்து நோன்பு கஞ்சி தயாரித்து நோன்பு இருக்கும் முஸ்லீம்களுக்கு வினியோகித்து வருகின்றனர். 

கடந்த நான்கு , ஐந்து ஆண்டுகளாக தான் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 90 % சதவீதத்திற்கு மேல் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்கள் தமிழக அரசு வழங்கும் இந்த நோன்பு கஞ்சி அரிசியை பயன்படுத்துவது இல்லை என்பதை தமிழக அரசு கவணத்தில் கொள்ள வேண்டும் .. 

வட்டி பணத்திலோ அல்லது மது விற்பனை மூலம் வரும் வருமானத்திலோ மற்றும் தடுக்கப்பட்ட வேறு எந்த வழியில் வரும் வருமானத்திலும் கஞ்சி செய்து சாப்பிட நோன்பாளிக்கு தடுக்கப்பட்டு உள்ளது. ஆகையால் முஸ்லீம்களுக்கு இலவசமாக தமிழக அரசு வழங்க உள்ள ரமலான் நோன்பு கஞ்சி பச்சரிசியை உடனே நிறுத்த வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்.

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு கொடுக்க உள்ள 6,000 மெட்ரிக் டன் பச்சரிசையை பொருளாதார நெருக்கடியால் பசி பட்டினியோடு  இலங்கையில் இருந்து தமிழகம் வரும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு வழங்கலாம் என்பது இந்திய தேசிய லீக் கட்சியின் கோரிக்கை என அதில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் ஹிஜாப் விவகாரத்தில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்படும் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார் என்பதற்காக தடா ரஹீமை காவல் துறை கைது செய்திருந்தது தற்போது ஜாமினில் வெளி வந்துள்ள அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!