2026 தேர்தலை முன்னிறுத்தி தான் எங்கள் இலக்கு... அதிரடி காட்டும் அன்புமணி ராமதாஸ்!!

Published : May 29, 2022, 08:39 PM IST
2026 தேர்தலை முன்னிறுத்தி தான் எங்கள் இலக்கு... அதிரடி காட்டும் அன்புமணி ராமதாஸ்!!

சுருக்கம்

பாட்டாளி மாடல் கொள்கை குறித்து வரும் காலங்களில் படிப்படியாக அறிவிக்கப்போவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

பாட்டாளி மாடல் கொள்கை குறித்து வரும் காலங்களில் படிப்படியாக அறிவிக்கப்போவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் இளைஞரணி பதவியை வேறொருவருக்கு அளிப்பது குறித்து தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாவட்டமாக, கிராம கிராமாக சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளேன். முக்கியமாக குடிநீர் பிரச்சினை உள்ளது. அதனை செய்ய சேலம் உபரி நீர் திட்டம், அத்தி கடவு முழுமையாக செயல்படும் திட்டம், பாலாறு தென் பெண்ணை ஆறு இணைக்கும் திட்டம், அனைத்து ஆறுகளிலும் தடுப்பணை கட்டும் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலிடம் சுற்றுப்பயணம் முடிந்த பிறகு வலியுறுத்த உள்ளேன். இனி பாமக 2.0 செயல் திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்த உள்ளோம்.

கால நிலை மாற்றதின் தாக்குதலால், நகரமயமாக்கல் அதிகமாகி வருகிறது. காலநிலை மாற்றத்தால், வரும் காலங்களில் அதிக அளவில் இயற்கை சிற்றத்தை எதிர்கொள்ள இருக்கிறோம். புதிய திட்டத்தை முன்னெடுத்து தொலைநோக்கி அடிப்படையில் அதிக நிதியை ஒதுக்கிடு செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். விவசாயிகள், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்தில் பாமக அதிக அளவில் ஆலோசனை செய்துள்ளோம். நேர்மையான முறையில் கட்சியை நடத்த வேண்டும். மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும்.

மக்களின் அன்றாட பிரச்சினையில் கவனித்து அதற்கு தீர்க்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு வலியுறுத்தி உள்ளேன். இனிமேல், வித்தியாசமான அணுகுமுறை காண்பீர்கள். சமத்துவம், சமூக நீதி தான் பாட்டாளி மக்கள் கட்சியின் அடித்தளம். முன்னாள் முதல்வர் கருணாநிதி சமூக நீதி காப்பதில் எனக்கு அடுத்து ராமதாஸ் தான் என்று அவரே சொல்லி இருக்கிறார். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதா? தனித்துப் போட்டியா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தற்போது எங்களுடைய இலக்கு 2026 தேர்தலை முன்னிறுத்தி தான். பாட்டாளி மாடல் கொள்கை குறித்து பின்னர் வரும் காலங்களில் படிப்படியாக அறிவிப்போம் என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!