நம்ம CM கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் மாறுவார்; RSS - ஐ வெறுப்பேற்றிய அமைச்சர் சேகர் பாபு

By Ezhilarasan BabuFirst Published Sep 29, 2022, 5:30 PM IST
Highlights

கனிவாக நடந்து கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் தேவைப்பட்டால் இரும்பாகவும் மாறுவார் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

கனிவாக நடந்து கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் தேவைப்பட்டால் இரும்பாகவும் மாறுவார் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது குறித்து அமைச்சர் சேகர் பாபு இவ்வாறு விளக்கமளித்தார்.

தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி 51க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடக்க இருந்தது. முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஆர்எஸ்எஸ் இயக்கம் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்தது. ஆனால் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி,  இடதுசாரி இயக்கங்கள் கோரிக்கை வைத்து வந்தன. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: ‘ஆணுறையும் சேர்த்துக் கேட்பிங்களா’! மாணவியின் கேள்விக்கு அநாகரீகமாக பதில் அளித்த பீகார் ஐஏஎஸ் அதிகாரி

நிச்சயம் இது சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என்பதால் தமிழக அரசு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதித்துள்ளது. அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மனிதச்சங்கிலி போராட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த தடை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில்தான் சென்னை நுங்கம்பாக்கத்தில்  இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 476 திருக்கோயில்களில் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகளுக்கான பணப்பரி வர்த்தனையை டிஜிட்டல் முறையில் அறிமுகம் செய்து அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை முடக்க நினைப்பது பகல் கனவாகவே முடியும்.. திமுகவை அலறவிடும் வானதி..!

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் முதற்கட்டமாக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் முறையாக சென்னை கபாலீஸ்வரர்  கோயிலில் இது தொடங்கப்பட்டுள்ளது. 471 கோயிலுக்கும் இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து கோயில்களுக்கும் இது விரிவுப்படுத்தப்படும். நூறு கோவில்களை புனரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரையில் 300 கோயிலில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

அப்போது ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதலமைச்சர் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்,  திராவிட மாடல் ஆட்சி என்பதை அவர் தினம் தினம் நிரூபித்து வருகிறார்,  தமிழகத்தில் மதம் சார்ந்த பிரச்சினைகளை உண்டாக்குவது, கலகத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை தடுக்க திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க தமிழக முதலமைச்சர் கனிவாகவும் இருப்பார், தேவைப்பட்டால் இரும்பாகவும் மாறுவார்.  இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார். 
 

click me!