#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு மீம்ஸ் ஹேஸ்டேக் போட்டு ரஜினியை வெச்சு செய்யும் வலைதள வாசிகள்....

Asianet News Tamil  
Published : Jan 05, 2018, 05:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு மீம்ஸ் ஹேஸ்டேக் போட்டு  ரஜினியை வெச்சு செய்யும் வலைதள வாசிகள்....

சுருக்கம்

oru nimusham thalai suththiduchchi is trending on twitter

செய்தியாளர் ஒருவர் என்னை பார்த்து உங்கள் கொள்கை என்னன்னு கேட்டாரு. எனக்கு அப்படியே ஒருநிமிஷம் தலை சுத்திருச்சுஎன அவர் பேசிய வார்த்தை என்கிற வசனத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு ரஜினியை வெச்சு செஞ்சி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார். அப்போது, வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி துவங்கி 234 தொகுதிகளில் போட்டியிடுவோம் என அறிவித்தார். தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும், அது காலத்தின் கட்டாயம் எனவும், தெரிவித்தார். தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த போது ‘ எனக்கு அரசியலை கண்டு பயமில்லை. மீடியாவை பார்த்துதான் பயம். நேத்து திடீர்னு ஒரு ”செய்தியாளர் ஒருவர் என்னை பார்த்து “உங்கள் கொள்கை என்னன்னு கேட்டாரு. எனக்கு அப்படியே ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு”, என கூறினார். அன்று முதல் இணையத்தில் ட்ரெண்டிங் இதுதான். பலரும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் “ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி”, எனக் கூறியிருந்தார்.

ஒரு பக்கம் அரசியலுக்கு வருபவர் ஊடகங்களை கண்டு பயப்படலாமா? என்கிற விவாதம்  மற்றொரு பக்கம் கொள்கை என்னவென்றே சொல்லாமல் ஆன்மீக அரசியல் ‘ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ என இதெல்லாம் ஒரு பதிலா  என  ‘ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ ஹேஸ்டேக்காக பயன்படுத்தி சமூக வலைத்தளமான டிவிட்டரில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டு வெச்சு செய்கின்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!