வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவு.. சென்னை மாநகராட்சி ஆணையர் சுற்றறிக்கை.

Published : Apr 22, 2021, 11:21 AM IST
வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவு.. சென்னை மாநகராட்சி ஆணையர் சுற்றறிக்கை.

சுருக்கம்

அரசு உத்தரவின்படி வரும் 25-4-2021 அன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

அரசு உத்தரவின்படி வரும் 25-4-2021 அன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை கால்நடை மருத்துவப் பிரிவு கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகின்ற 25-4-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. 

எனவே அரசு உத்தரவின்படி  கண்டிப்பாக 25-4-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று முழுவதும் அனைத்து இறைச்சிக் கடைகள் பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே அரசு  உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தனது அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

12,000 அடி உயரத்தில் பதுங்கு குழியில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள்..! உயிர் பிழைக்க பதுக்கிய அரசி- மேகி..!
ஆளுநரின் தேநீர் விருந்து.. ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!