போரூர் ஏரியை மூட பார்த்தவர் ஓபிஎஸ்.. காப்பாற்றியவர் ஸ்டாலின்.. அதிமுகவை புரட்டி எடுத்த மா.சு.

Published : Jul 17, 2021, 01:08 PM IST
போரூர் ஏரியை மூட பார்த்தவர் ஓபிஎஸ்.. காப்பாற்றியவர் ஸ்டாலின்.. அதிமுகவை புரட்டி எடுத்த மா.சு.

சுருக்கம்

அப்போது பேசிய அவர், தற்போது தமிழகத்தில் 4,15,570 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளத்தையும் மத்திய அமைச்சரிடம் எடுத்து கூறி உள்ளோம்.

11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய குழு ஆய்வு நடத்த  விரைவில் தமிழகம் வர உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தியாகிகள் ஆர்யா பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன் ஆகியோரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ஆம் நாள் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் தியாகிகள் ஆர்யா(எ) பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன் ஆகியோரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்  மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போது தமிழகத்தில் 4,15,570 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. 

தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளத்தையும் மத்திய அமைச்சரிடம் எடுத்து கூறி உள்ளோம். மேலும் முதலமைச்சர் கோரிக்கையான, கூடுதல் தொகுப்பாக 1 கோடி தடுப்பூசி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் அமைச்சரிடம் வைத்துள்ளோம். அதேபோல் தமிழகத்தில் அதிகளவு தடுப்பூசி செலுத்துவது குறித்து பிரதமரே பாராட்டி உள்ளார். தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக அனைத்து புகைப்பட தரவுகளையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் அளித்து உள்ளதாகவும். எனவே விரைவில் மத்திய அரசு குழு தமிழகம் வந்து, கல்லூரிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும், அதன் பின் தான் மாணவர்கள் சேர்க்கை குறித்து தெரிய வரும் என்றும் அமைச்சர் கூறினார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதியதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதுகுறித்து அமைச்சர் பரிசீலப்பதாக கூறியுள்ளார். போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பான ஓபிஎஸ் அறிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர்,  கடந்த அதிமுக ஆட்சியில் போரூர் ஏரியை மூட முயற்சி நடந்தது, முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் நடத்திய போராட்டத்தால் தான் தற்போது போரூர் ஏரி இருக்கிறது. அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ஓபிஎஸ் தான். போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் டெங்கு பரவல் தொடர்பாக போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்