அடித்தட்டு மக்களின் அத்தியாவசியங்களை தீர்த்து வைக்கும் ஓ.பி.எஸ்... நெகிழ்ச்சியில் விவசாயிகள்..!

By Thiraviaraj RMFirst Published Dec 9, 2020, 11:48 AM IST
Highlights

அடித்தட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை புரிந்து கொண்டு அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று நீண்ட நாட்களாக தீர்த்து வைக்கப்படாத கோரிக்கைகளை தீர்த்து வைத்து வருகிறார் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ்.
 

அடித்தட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை புரிந்து கொண்டு அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று நீண்ட நாட்களாக தீர்த்து வைக்கப்படாத கோரிக்கைகளை தீர்த்து வைத்து வருகிறார் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ்.

தேனி மாவட்டம், போடி அருகே உள்ளது மேலப்பரவு கிராமம். இங்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களான இவர்கள் வசிக்கும் பகுதிக்கு சாலை வசதி இல்லை. சிலருக்கு வசதியான வீடுகள் இல்லை. வெள்ளையர் ஆட்சி காலத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகும் கூட இந்த மலைப்பகுதி கிராமத்துக்கு வந்து எவரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஓ.பி.எஸ் அந்த கிராமத்திற்கே சென்று, சாலை வசதிகள், அனைவருக்கும் வீடு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை உடனடியாக செய்து தர உத்தரவிட்டார்.  
                
முன்னதாக, போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 12 கிராம மக்களின் நெடுநாளைய கனவை நிறைவேற்றி இருக்கிறார் ஓ.பி.எஸ் தம்பி நாயக்கன் பட்டி, டி.மீனாட்சி புரம், ஏரணம்பட்டி, கோனாம்பட்டி, திம்மிநாயக்கன் பட்டி, ஈ.புதுக்கோட்டை, பொட்டி புரம், ராசிங்காபுரம், சின்ன பொட்டி பரம், சிலைமலை, சில்லமரத்து பட்டி, தர்மத்து பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்கள் அனைத்தும் மானாவரி அதாவது வானம் பார்த்த பூமியாக மழை பெய்தால் மட்டும்  விவசாயம் நடைபெற்று வந்தது.

இப்பகுதியை சேர்ந்த மக்கள் துணை முதல்வர் ஓ.பி.எஸிடம் 18 ஆம் கால்வாயை நீடித்து தந்து இப்பகுதியில் உள்ள சுமார் 6000 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாயிகள் நிலம் பயன் பெறலாம் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று சுமார் 51 கோடி ரூபாய் செலவில் 18 ஆம் கால்வாயை நீடித்து உத்தரவிட்டார். இப்போது அப்பகுதி மக்கள் பயன்பெற்று நன்றி தெரிவித்து வருகின்றனர். 

click me!