தமிழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் கொடியை பயன்படுத்தி வெற்றிகரமான ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம். இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. தேர்தல் ஆணையத்தில் எங்களின் பெயர் உள்ளது.
அண்ணாமலை இன்னொருமுறை எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதினால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என புகழேந்தி கூறியுள்ளார்.
சேலத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சேலம் கொடநாடு கொலை வழக்கில் உளறுகிறார். ஜெயலலிதா அவர்கள் ஏன் இவர்களை பேசவிடாமல் வைத்திருக்கிறார்கள் என்று இப்போதுதான் புரிகிறது. ஜெயக்குமார் கொடநாடு என்பது ஜெயலலிதா அம்மா உடையது இல்லை தனியார் எஸ்டேட் என்று கூறுகிறார். தேர்தலில் ஜெயலலிதா அம்மா அவர்கள் சொத்து கணக்கில் கொடநாடு அவருடைய பெயரில் உள்ளது என்று தாக்கல் செய்துள்ளார். ஆனால், ஜெயக்குமார் பழைய நிகழ்வை மறந்துவிட்டு கதைகளை பேசி வருகிறார்.
இன்னொருத்தர் 234 தொகுதிகளிலும் திண்டுக்கல் சீனிவாசன் திமுகவின் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவோம் என்று உளறி வருகிறார். மேலும் குடிகாரன் சி.வி.சண்முகம் மது போதையில் பேசி வருகிறார். இபிஎஸ் இது போன்ற கூட்டத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்து வருகிறார். கொடநாடு ஒரு முடிவு வரும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் அண்ணாமலை யார் என்று கேட்டார். பாஜக தலைவர் என்று கூறிய போது தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சி உள்ளதா? என்று கேள்வி எழுப்புகிறார்.
ஆனால் இன்றைக்கு அண்ணாமலை சொல்கிறார் ஓபிஎஸ்ஐ பற்றியும் இபிஎஸ் பற்றியும் பேசுகிறார். அன்னைக்கு நடைபெற்ற கூட்டத்தில் எங்களை கூப்பிடவில்லை அன்றைக்கே உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவு முடிந்து விட்டது என ஆவேசமாக தெரிவித்தார். குளிர்கால கூட்டத் தொடர் கூட்டத்திற்கு ரவீந்திரநாத் அவர்களை அழைத்துள்ளனர். நீங்கள் மதித்தால் நாங்கள் மதிப்போம். இந்த கொள்கையை கொண்டவர் ஓபிஎஸ் நீங்கள் மிதித்தால் நாங்களும் திரும்ப மிதிப்போம். அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று கூறினார்கள். ஆனால் தமிழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் கொடியை பயன்படுத்தி வெற்றிகரமான ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம். இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. தேர்தல் ஆணையத்தில் எங்களின் பெயர் உள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை இன்னொருமுறை பொதுச்செயலாளர் என்று கடிதம் எழுதி அனுப்பினால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் ஓ பன்னீர்செல்வம் அவர்களை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட வேண்டும் என்று பேசினார்.