
ஓ.பன்னீர்செல்வம் அணியின் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியின் தேர்தல் பணிமனை, வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் திறக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் குத்து விளக்கை ஏற்றி வைத்து, தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.
பின்னர், ஆர்கே நகர் தொகுதி தேர்தலுக்கான 108 அம்சங்கள் கொண்ட அறிக்கையை அவர் வெளியிட, வேட்பாளர் மதுசூதனன் பெற்று கொண்டார். இதில் மாபா பண்டியராஜன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், கே.பி.முனுசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடமாடும் எம்எல்ஏ அலுவலகம், எழில் நகரில் சுற்றுலா மையம், பல ஆண்டுகளாக பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்குவது, தடையின்றி மின்சாரம் வழங்குவது, பொதுதுறை வங்கிகள், சுகாதாரமான குடிநீர், திருநங்கைகளுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலை வழங்குவது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களை நியமிப்பது உள்பட 108 அம்சங்கள் உள்ளன.