
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் சசிகலா, ஓ.பி.எஸ்., தரப்பின் வாதம் துவங்கியது.
தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னிலையில் இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே தரவேண்டும் என வாதம் செய்து வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான சி.எஸ்.வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதே சட்ட விரோதமானது.
அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் எங்களிடம் உள்ளனர். நாங்களே உண்மையான அதிமுகவினர். எங்களுக்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என வாதிட்டு வருகின்றனர்.