
ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக சார்பில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணிகள் மோதுகின்றன. இவர்கள் இருவருமே, இரட்டை இலை சின்னம் தங்களுக்கே தரவேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக இன்று, டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் முன்னிலையில், இரு தரப்பினர் இடையே விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்பேரில், இன்று ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன், வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார் ஆகியோரும், சசிகலா தரப்பில் சல்மான் குர்ஷித், மோகன் பராசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு தங்களது வாதத்தை முன் வைத்து பேசி வருகின்றனர்.
இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர், தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அறிவிப்பார். அவ்வாறு முடியாத பட்சத்தில், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என கூறப்படுகிறது.