இபிஎஸ், ஒபிஎஸ் கொண்டாட்டம்..! - சசிகலா கோஷ்டிக்கு திண்டாட்டம்...!!!

Asianet News Tamil  
Published : Aug 17, 2017, 05:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
இபிஎஸ், ஒபிஎஸ் கொண்டாட்டம்..! - சசிகலா கோஷ்டிக்கு திண்டாட்டம்...!!!

சுருக்கம்

ops team and eps team with enjoyment and sasikala team very sad

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

72 நாள் சிகிச்சைக்கு பிறகு சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. 

இதையடுத்து அவசர அவசரமாக அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும், முதலமைச்சராக பன்னீர்செல்வமும் தேர்வு செய்யப்பட்டனர். 

ஆனால் சில நாட்களில் ஜெயலலிதாவை போன்று சசிகலாவின் உடை அலங்கார தோற்றம் மாறியதை கண்டு அனைவரும் கொதித்து எழுந்தனர். ஆனாலும் பதவி ஆசையில் சசிகலா முதலமைச்சரின் நாற்காலியில் அமர ஆசைப்பட்டு பன்னீரை பதவி விலக கோரி வற்புறுத்தியுள்ளார். 

இதனால் பதவி விலகிய பன்னீர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என முழக்கமிட ஆரம்பித்தார். 

இதனிடையே சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். இதனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதைதொடர்ந்து துணைபொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி தினகரனை ஓரங்கட்ட ஆரம்பித்தார். 

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பன்னீருடன் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையில் முற்பட்டார் . ஆனால் பன்னீர் வளைந்து கொடுக்கவில்லை. 

இந்நிலையில் பன்னீரின் வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெ மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கப்படும் எனவும், ஜெ வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

ஏற்கனவே இரு அணிகளும் இணையும் இணையும் என பூச்சாண்டி காட்டியதைகண்டு ஏமாற்ற மடைந்த தொண்டர்களுக்கு முதலமைச்சரின் அறிவிப்பு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. 

இதனால் ஒபிஎஸ் அணியினரும் இபிஎஸ் அணியினரும் கொண்டாட்டத்தில் திளைத்து வருகின்றனர். 
ஆனால் கூட இருந்து குழி பறித்தது போல் எடப்பாடியின் மீது ஏற்கனவே உச்சகட்ட கோபத்தில் இருந்த சசிகலா கோஷ்டி இருக்க இருக்க திண்டாட்டத்தில் திளைத்து வருகின்றது. 

PREV
click me!

Recommended Stories

ஒருத்தர்கூட மிஸ்ஸாகி விட கூடாது.. அதிமுக மா.செ.க்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இபிஎஸ்..!
இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதே நாங்கதான்..! உலகத்துக்கே நாட்டாமையாக கொக்கரிக்கும் சீனா..!