பணத்தை அவிழ்க்க பயப்படும் பன்னீர் தரப்பு : கிண்டலடிக்கும் தினகரன் ஆதரவாளர்கள்!

Asianet News Tamil  
Published : Apr 01, 2017, 11:02 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
பணத்தை அவிழ்க்க பயப்படும் பன்னீர் தரப்பு : கிண்டலடிக்கும் தினகரன் ஆதரவாளர்கள்!

சுருக்கம்

ops team afraid of distributing money

தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய, நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் தொகுதிக்கு வரவில்லை என்பதை மேடைக்கு மேடை விளாசி தள்ளுகிறது பன்னீர் தரப்பு.

ஆனால், பன்னீர் அணியில்  கோடி,கோடியாக சம்பாதித்தவர்கள், ஐந்து பைசா செலவு செய்வதற்கு கூட மேலும், கீழும் பார்க்கின்றனர் என்று தினகரன் தரப்பினர் கிண்டலடித்து வருகின்றனர். 

பன்னீரின் அணியில் அமைச்சராக இருந்தவர்கள், கணக்கு வழக்கில்லாமல் ஏராளமான பணத்தை குவித்து வைத்துள்ளனர்.

ஆனால்  செலவு செய்வது யார் என்பதில்தான் அங்கு சிக்கல் நிலவுகிறது.  பன்னீா் செல்வம், நத்தம் விஸ்வநாதனை கைகாட்ட, அவா் மாஃபா பாண்டியராஜன் பக்கம் பார்வையைத் திருப்புகிறார். 

ஆனால் மாஃபா செலவு செய்வதில் சுணக்கம் காட்டுகிறார். ஆதலால் அங்கு தொண்டர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு போவதில்லை. 

எனவே, அங்குள்ள தொண்டர்கள் அனைவரும்  மறுபடியும் எங்கள் அணிக்கே திரும்பி வருகிறார்கள் என்கிறது தினகரனின் தரப்பு.

தினகரனை வீழ்த்த பன்னீர் என்ன  செய்யப் போகிறார் என்பதுதான் இப்போதைய கேள்வி?

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!