ஓபிஎஸ்.க்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது... தினகரன் திடுக் தகவல்!

Published : Sep 02, 2018, 05:25 PM ISTUpdated : Sep 09, 2018, 07:59 PM IST
ஓபிஎஸ்.க்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது... தினகரன் திடுக் தகவல்!

சுருக்கம்

முதல்வர் பதவி இனி கிடைக்காது என்ற விரக்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார் என தினகரன் கூறியுள்ளார். முன்னதாக ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே டிடிவி.தினகரன் முதலமைச்சராக சதி செய்ததாக துணை முதலமைச்சர் குற்றம்சாட்டியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர் பதவி இனி கிடைக்காது என்ற விரக்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார் என தினகரன் கூறியுள்ளார். முன்னதாக ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே டிடிவி.தினகரன் முதலமைச்சராக சதி செய்ததாக துணை முதலமைச்சர் குற்றம்சாட்டியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் காவிரி நதிநீர் பிரச்னைக்கு உரிய தீர்வு கண்ட அதிமுக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இதில் பேசிய ஓபிஎஸ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே, டிடிவி தினகரன் முதலமைச்சராக வேண்டும் என சதி செய்தார் என்று தெரிவித்தார். அதை புரிந்துக்கொண்ட டிடிவி தினகரனை, ஜெயலலிதா வெளியேற்றியதாகவும், அவர் மறைந்த பிறகு திவாகரன் இல்லாத நேரத்தில் மிரட்டி, தன்னை முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்ததாகவும் மன்னார்குடி கூட்டத்தில் பன்னீர்செல்வம் பேசினார்.

இதற்கு டிடிவி.தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். தஞ்சையில் திருமண விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் முதல்வர் பதவி இனி கிடைக்காது என்ற விரக்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் அவர் பேசியிருக்கிறார் என விமர்சனம் செய்துள்ளார்.

 

உண்மைக்கு புறப்பான தகவலை மேடையில் கிடைத்த இடத்தில் அண்ட புளுகை கூறி வருகிறார். அவர் பேசியதில் எவ்வளவு உண்மை என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் என தினகரன் கூறியுள்ளார். ஓபிஎஸ் பதவி வெறியில் பேசிவருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்றார்.

PREV
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்