
அளவுக்கு அதிகமான சுதந்திரமும் சில நேரங்களில் தேவை இல்லாத சிக்கல்களை உருவாக்கி விடும் என்பதை, சற்று தாமதமாகவே உணர்ந்துள்ளார் பன்னீர்செல்வம்.
பன்னீர் அணியில் உள்ள தலைவர்களை பொறுத்த வரை, மீடியாவில் பேசுவதற்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. அதனால், அவர்கள் சுதந்திரமாக பேசி வந்தனர்.
ஆனால், அவர்கள் அவ்வாறு பேசுவது அணிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சிக்கலை ஏற்படுத்தி விட்டது. அதை எடப்பாடி தரப்பினரும் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அணிகள் இணைப்பு பற்றி எது பேசினாலும் அது தவறாக ஆகிவிடுகிறது என்று, எடப்பாடி அணையை சேர்ந்த அமைச்சர் வேலுமணியே, தற்போது அது குறித்து பேசுவதை தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில், தமது அணியில் உள்ள முக்கிய தலைவர்களிடம், மீடியாவில் எதுவும் பேச வேண்டாம், அப்படியே பேசினால், என்ன பேசப்போகிறீர்கள் என்பதை என்னிடம் சொல்லிவிட்டு பேசுங்கள் என்று பன்னீர் கூறி விட்டார்.
அவர்களும் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே, இனி பன்னீர் தரப்பில் இருந்து யாரும் மீடியாவில் அதிகம் பேசமாட்டார்கள். அப்படியே பேசினாலும், அது பன்னீரின் குரலாகத்தான் இருக்கும்.