சொந்த ஊரில் மரண மாஸ் காட்டும் ஓபிஆர்!! தேனி தொகுதிக்கு தேனீ மாதிரி வேலைபார்க்கும் தோஸ்துகள்....

By sathish kFirst Published Feb 4, 2019, 12:17 PM IST
Highlights

ஜெயக்குமார் மகனைப்போலவே தனது சொந்த ஊரில் மாஸ் காட்டி வருகிறார் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பி. ரவீந்திரநாத்.

நடக்கவிருக்கும் தேர்தலில் அதிமுகவிலுள்ள தலைவர்கள் தங்களது வாரிசுகளை களமிறக்கி வருகின்றனர். கடந்த முறை ஜெயக்குமாரை ஓரம் கட்டிவிட்டு அவரது மகன் ஜெயவர்தனுக்கு சீட் கொடுத்து எம்.பி ஆக்கினார். அதிமுகவின் பல்வேறு கட்சி அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘புரட்சித் தலைவி அம்மா பேரவை’க்கு புதிய நிர்வாகிகள்  அறிவிக்கப்பட்டதில், ஜெயக்குமாரின் மகனும், தென் சென்னை தொகுதி அதிமுக எம்.பி.யுமான ஜெயவர்த்தனுக்கு புரட்சித் தலைவி அம்மா பேரவையின் இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

அதேபோல, துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பி. ரவீந்திரநாத்துக்கு புரட்சி தலைவி அம்மா பேரவையின் தேனி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பதவி தரப்பட்ட ரவீந்திரநாத், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இளைஞர் இளம் பெண் பாசறையின் தேனி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்மூலம் அவர் அரசியல் களத்தில் குதித்து மாவட்ட அளவில் அரசியல் செய்து வந்தார். ஆனால் திடீரென அவரிடமிருந்து பதவியை ஜெயலலிதா பறித்து விட்டார். இவர் மீது பல புகார்கள் வலம் வந்தன. என்றாலும் இவரை தனக்கு பின் கட்சிக்குள் கொண்டு வந்து எப்படியாவது அரசியல் வாரிசாக உருவாக்கி விட வேண்டும் என்று ஆசைப்பட்ட ஓபிஎஸ். இதனாலே இவருக்கு கட்சியில் பொறுப்பும் வழங்கப்பட்டது.  இதனையடுத்து தேனி மாவட்டத்தில் "தாயின் தலைமகனாரின் நற்பணி இயக்கம்" என்ற பெயரில் ஓபிஎஸ்-க்கு அவரது ஆதரவாளர்கள் நற்பணி மன்றம் தொடங்கினார்கள். இது சம்பந்தமாக ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். இதில் ரவீந்திரநாத் படமும் இடம் பெற்றது. 

இந்நிலையில், அடுத்து நடக்கவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தலுக்கு அரசியல் காட்சிகள் தயாராகி வரும் நிலையில், அதிமுக கூட்டணி இன்னும் முடிவாகமலேயே இருக்கிறது. கடந்த தேர்தலில் ஜெயக்குமார் மகனுக்கு எம்.பி சீட் கொடுத்ததைப்போல இந்த தேர்தலில், ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் தேனி மக்களவைத் தொகுதி தொகுதியில் நிற்க பிளான் போட்டுள்ளாராம், இதனால் அவரது ஆதரவாளர்கள் தற்போது தேனி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய, பெரிய பேனர் கட் அவுட் வைத்துள்ளனர். 

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ரவீந்திரநாத்க்கு அவரது ஆதரவாளர்களும், நண்பர்களும் ப்ளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் "இன்று 3 பிறந்தநாள் காணும் ஓபிஆர், தேனி டூ டெல்லி" என போட்டுள்ளனர். அதாவது வரவிற்கும் தேர்தலில் தேனி தொகுதிக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளது தெரிகிறது.

click me!