இதை வைத்தெல்லாம் ஒரு பொழைப்பா..? மு.க. ஸ்டாலினை சீண்டும் நிர்மலா சீதாராமன்!

By Asianet TamilFirst Published Feb 4, 2019, 11:51 AM IST
Highlights

அண்மையில் மதுரையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திமுக என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்காததற்கு மாறாக, கோவையில் திமுகவைக் கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அண்மையில் மதுரையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திமுக என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்காததற்கு மாறாக, கோவையில் திமுகவைக் கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கோவை, திருப்பூர், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை கடுமையாகத் தாக்கி பேசினார்.  “மத்திய அரசில் பல ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தன? எதுவுமே செய்யாத அவர்கள், இப்போது வேண்டுமென்றே கேள்வி எழுப்புகிறார்கள். தமிழக மக்கள் பாஜகவுக்கு ஒரே ஒரு எம்.பி.யைத்தான் கொடுத்தார்கள். அதற்காக தமிழகத்தை பிரதமர்  ஒதுக்கவில்லை. தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்களை மோடி நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். 

பிரதமர் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் கருப்புக் கொடி காட்டுவது கீழ்த்தரமான அரசியல். இது தமிழகத்தின் இமேஜைதான் பாதிக்கும். தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு எல்லா வகையிலும் திமுக இடையூறாக இருக்கிறது. மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய ஒவ்வொருவருக்கும் தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும்.

தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற வேண்டும் தானும் நல்லது செய்யாமல் மற்றவர்களையும் செய்யவிடாமல் தடுக்கும் தி.மு.கவுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்க வேண்டும்” என்று காட்டமாகப் பேசினார். அண்மையில் மதுரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, திமுக என்ற வார்த்தையைக் குறிப்பிடுவதைக்கூட தவிர்த்தார். பொருளாதார இடஒதுக்கீடு தொடர்பாக சில சுயநலபேர் வழிகள் தூண்டிவிடுகிறார்கள் என்று பட்டும் படாமலும் மோடி பேசினார்.

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை மனதில் வைத்துதான் திமுகவை விமர்சித்து பிரதமர் மோடி பேசவில்லை என்ற விவாதம் அரசியல் அரங்கில் பேசப்பட்டுவருகிறது. தற்போது அதற்கு மாறாக மத்திய அமைச்சர் திமுகவை கடுமையாகத் தாக்கி பேசியிருக்கிறார்.

click me!