ஓ.பி.எஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி..? நடுக்கத்தில் எடப்பாடி..!

Published : May 25, 2019, 03:31 PM ISTUpdated : May 25, 2019, 03:36 PM IST
ஓ.பி.எஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி..? நடுக்கத்தில் எடப்பாடி..!

சுருக்கம்

பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் அமையும் மத்திய அமைச்சரவையில் தனது மகனுக்கு பதவி பெற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர முயற்சி கொண்டுள்ளார். 

பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் அமையும் மத்திய அமைச்சரவையில் தனது மகனுக்கு பதவி பெற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர முயற்சி கொண்டுள்ளார்.

 


பாஜக கூட்டணியில் தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ள ஒரே எம்.பி. தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார். தனியொருவனாய் வெற்றி பெற்ற அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என ஓ.பி.எஸ் தரப்பு எதிர்பார்த்து வருகிறது. 

ஆனால், அனுபமில்லாத ரவீந்திரநாத்திற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க பாஜக தயங்குவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிமுகவுக்கு மாநிலங்களவையில் உள்ள பலம் மற்றும் மோடியுடன் தனக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பெறுவதற்கான முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரம் காட்டி வருகிறார்.

 

தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களது கட்சியினருக்கு அமைச்சர் பதவி கேட்டு வலியுறுத்த உள்ளனர். இந்தக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடபபாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இதற்காக அவரது மகனையும் டெல்லிக்கு அழைத்து செல்கிறார். இணையமைச்சர் பதவியாவது கேட்டுப் பெறும் முயற்சியில் ஓ.பி.எஸ் தரப்பு உள்ளது. 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு தனது மகனுடன் சென்றார் ஓ.பி.எஸ். அங்காளி பங்காளி மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், அதிமுக மானத்தை காப்பாற்றியதற்காக ரவீந்திரநாத்தை மனம் விட்டு பாராட்டி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும், ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்க தான் பரிந்துரை செய்யப்போவதில்லை என்கிற முடிவில் எடப்பாடி இருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம், ரவீந்திரநாத் மத்திய அமைச்சரானால், பாஜக தலைமையிடம் ஓ.பி.எஸ் குடும்பம் நெருக்கம் காட்டி, அதனால் தனது பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. 

கொள்ளியை எடுத்து சட்டையில் செருகிக்கொள்ளக் கூடாது என எச்சரிக்கையாக இருக்கிறார் எடப்பாடி. அதேவேளை பாஜக தானாக முன்வந்து அமைச்சர் பதவி கொடுத்தால் அதனை எதிர்க்கப்போவதில்லை என்கிற முடிவிலும் அவர் இருப்பதாகத் தகவல்.
 

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு 23 தொகுதிகளா? ஓபிஎஸ், டிடிவியை ஏற்றுக்கொண்டாரா இபிஎஸ்? நயினார் சொன்ன முக்கிய அப்டேட்!
திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!