மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா!! ஆர்.எஸ்.எஸ் தீவிர ஆலோசனை....

By sathish kFirst Published May 25, 2019, 3:22 PM IST
Highlights

சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட  நேருக்கு நேராக மோதியது பிஜேபி காங்கிரஸ், இதில் கார்த்திக் சிதம்பரம் 5 லட்சத்து 66 ஆயிரத்து 104 வாக்குகள் பெற்றார். ஹெச்.ராஜா 2 லட்சத்து 33 ஆயிரத்து 860 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். 

சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட  நேருக்கு நேராக மோதியது பிஜேபி காங்கிரஸ், இதில் கார்த்திக் சிதம்பரம் 5 லட்சத்து 66 ஆயிரத்து 104 வாக்குகள் பெற்றார். ஹெச்.ராஜா 2 லட்சத்து 33 ஆயிரத்து 860 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிஜேபி தனியாகவே அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகிறார் மோடி. 2014 தேர்தலில் பிஜேபி மட்டும் 282 இடங்களில் வெற்றிபெற்றது. இம்முறை அதைவிட 21 தொகுதிகள் அதிகமாக பெற்று பாஜக மட்டுமே 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிஜேபி கூட்டணி மொத்தம் 352 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மீண்டும் பிஜேபி மத்தியில் ஆட்சியமைக்க உள்ள நிலையில் ஹெச்.ராஜாவிற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க உள்ளார்களாம்.

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 352 இல் பிஜேபி கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் , கேரளா மற்றும் தமிழகத்தில் ஒரு இடம் கூட பிஜேபிக்கு கிடைக்காததால் பிஜேபி தலைவர் அமித்ஷா பயங்கர கடுப்பில் உள்ளாராம். 

இந்நிலையில், புதிய அமையவுள்ள அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற ஆலோசனை தீவிரமாக நடந்துவரும் நிலையில், தங்களுக்கு ஒரு எம்பியை கூட தராத மாநிலமாக இருந்தாலும் தமிழக பிஜேபிக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவியைத் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாம் ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸின் இந்த அதிரடி முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது, இதனால் கார்த்தி சிதம்பரத்திடம் படு தோல்வியை பரிசாக வாங்கிய ஹெச்.ராஜா நேற்று அவசரமாக டெல்லி சென்றுள்ளார். மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போதே , ‘இந்த முறை பாஜக ஆட்சி அமைத்தால், நான் ஜெயித்தால் மட்டுமல்ல தோற்றாலும் மத்திய அமைச்சர் பதவி தனக்கு கிடைக்கும் என்று நெருக்கமானவர்களிடம் பேசியிருந்தாராம் ஹெச்.,ராஜா. இந்நிலையில் ராஜாவின் டெல்லி பயணத்தின் மூலம் புதிய அமைச்சரவையில் தமிழக பிஜேபியின் பிரதிநிதியாக ஹெச்.ராஜா இருக்கலாம் என்ற பேச்சு சொல்லப்படுகிறது.

அதேபோல, அதிமுக பிஜேபி கூட்டணியில் ஜெயித்த ஒரே ஒரு  ஆளான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்க்கு மத்தியில் அமைச்சர் பதவி கிடைக்கும் பட்சத்தில், ஹெச் ராஜா கூட்டணிக் கட்சியான அதிமுகவின் ஆதரவோடு தமிழ்நாட்டில் இருந்தே அவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக்கப்படுவார் என சொல்லப்படுகிறது. எப்படியும் தனக்கும் மத்தியில் அமைச்சர் பதவி கிடைத்துவிடும் என்பதால், தான் தோற்ற அந்த கவலையை மறந்த நம்ம ஹெச்.ராசா செம்ம ஹேப்பியாக ஸ்வீட் கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

click me!