ஊர்ந்து சென்று பதவி பெற்று நம்பிக்கை துரோகம் செய்தது யார்..? இபிஎஸ்யை இறங்கி அடித்த ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Oct 20, 2022, 4:06 PM IST

அதிமுகவில் விரும்பத்தகாத செயல்களை யார் செய்தார்கள் என தொண்டர்களுக்கு தெரியும். பாவத்தை எல்லாம் அவர்கள் செய்து விட்டு இன்று மற்றவர் மீது பழி போடுகிறார்கள். ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார் என்று எல்லோருக்கும் தெரியும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 


அதிமுக அதிகார மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்கிய  இபிஎஸ், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்தும் ஓபிஎஸ்யை நீக்கி ஆர்பி உதயகுமாரை நியமித்தார். இதற்கான கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கப்பட்டது. இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஓபிஎஸ் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார். அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் தான் தான் எனவும் தன்னை கேட்டு தான் அதிமுக தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

ஓபிஎஸ்- ஸ்டாலின் ரகசிய பேச்சு

இந்தநிலையில் சட்டமன்றத்தில் ஓபிஎஸ்க்கு எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை ஒதுக்கப்பட்டற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இபிஎஸ் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், நேற்று சட்டமன்ற கூட்டம் முடிந்த பிறகு ஸ்டாலினும் ஓபிஎஸ்ஸூம் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அதிமுகவை முடக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஓபிஎஸ்க்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் செயல்படுவது வெளிப்படையாக தெரிகிறது என கூறியிருந்தார்.

ஸ்டாலினை சந்தித்து பேசியதை இபிஎஸ் நிருபிக்க தயாரா?அரசியலை விட்டு விலக நான் தயார்.! நீங்கள் தயாரா? ஓபிஎஸ் சவால்

ஊர்ந்து சென்றது யார்

இதனையடுத்து இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், தேவர் தங்க கவச விவகார வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்ற உத்தரவு படி நடப்போம் என கூறினார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து நீதிமன்றத்திற்கு செல்ல சிலர் முடிவு செய்துள்ளார்கள். அதுவரை நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஸ்டாலினை நான்  சந்தித்ததாக கூறுவது தவறு. அதிமுகவில் விரும்பத்தகாத செயல்களை யார் செய்தார்கள் என தொண்டர்களுக்கு தெரியும். பாவத்தை எல்லாம் அவர்கள் செய்து விட்டு இன்று மற்றவர் மீது பழி போடுகிறார்கள். ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார் என்று எல்லோருக்கும் தெரியும். நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்பதை நாட்டு மக்களுக்கு தெரியும், அதிமுக இணையவேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக கூறினார்.  தொண்டர்களுக்கு என்னை பற்றி தெரியும் தொண்டர்களை பற்றி எனக்கு தெரியும், உரிய நேரத்தில் உரிய முறையில் தொண்டர்களை அனுகுவேன் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

'நீங்களும் சரியில்லை டாக்டர்'... மருத்துவமனையில் இருமியபடி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு

click me!