
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முதலமைச்சர் நேரடியாக கவனம் செலுத்தி பிரச்சனையை தீர்க்க வேண்டும்என கூறினார்.
விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
அதிமுகவின் இரு அணிகள் இணைவதில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதில் எங்கள் அணியில் எந்த முட்டுக்கட்டையும் இல்லை. எப்போது பேச்சு வார்த்தைக்கு அழைத்தாலும், நாங்கள் தயார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேரடி கவனம் செலுத்தி, பிர்ச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் குறைந்த அளவு பஸ்களே ஓடுகின்றன. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.