என்னது நான் டெல்லியில் போய் கம்ப்ளைண்ட் பண்ணுனனா ? நோ சான்ஸ் …. அதிரடியாக மறுத்த ஓபிஎஸ் !

By Selvanayagam PFirst Published Jul 24, 2019, 8:33 AM IST
Highlights

மத்திய உள்துறை அமைச்சரிடம் யாரைப் பற்றியும் எந்தவிதமான புகாரையும் கூறவில்லை. அதுபோன்ற பழக்கம் எனக்கு எப்போதும் இருந்தது கிடையாது''என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் திடீரென நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். மருத்வ சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை கவனிக்க டெல்லி சென்றதாக கூறப்பட்டது. 

ஆனால் அவர் திடீரென  பாஜக  தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவையும் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவையும் நேரில் சந்தித்துப் பேசினார்.  இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என தெரிவிக்கப்பட்டாலும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் நேற்று காலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் நார்த்பிளாக் அலுவலகத்தில் சந்தித்தார். பின் மாலையில் சென்னை கிளம்புவதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பல்வேறு புகார்களை கூறியதாக வெளியான செய்திகளில் துளி கூட உண்மையில்லை. யாரைப்பற்றியும் புகார் செய்யும் பழக்கம் என்னிடம் கிடையாது என்றும் தெரிவித்தார்.

இது முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி கேட்டு மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். மற்றபடி இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை.

யாராக இருந்தாலும் தகுதியும் திறமையும் இருந்து பொதுமக்களின் நன்மதிப்பையும் பெற்றால் தான் அரசியலில் நீடிக்க முடியும். என் மகன் ரவீந்திரநாத் குமாருக்கும் இது பொருந்தும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

click me!