ஒபிஎஸ் இடமிருந்த நிதித்துறை, ஜெயக்குமார் வசம் ஒப்படைப்பு.......

 
Published : Feb 23, 2017, 06:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
ஒபிஎஸ்  இடமிருந்த  நிதித்துறை,  ஜெயக்குமார் வசம் ஒப்படைப்பு.......

சுருக்கம்

 ஒபிஎஸ்ஸிடம் இருந்த நிதித்துறை ஜெயகுமார் வசம் ஒப்படைப்பு.......

முன்னாள் முதலமைச்சரான ஒ.பன்னீர் செல்வம் வகித்து வந்த மிக முக்கியமான துறையான நிதித்துறை  மற்றும் திட்டம் நிர்வாக சீர்த்திருத்த துறை ஆகியவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரிடம்  கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒ. பன்னீர்  செல்வத்திடத்திடமிருந்து,  ஆட்சியை கைப்பற்றிய எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற ஒரு வாரகாலமாக  நிதித்துறை  அமைச்சகத்தை  கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில்  நிதியமைச்சகம்  ஜெயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின் , நடைபெறும் முதல் அமைச்சரவை மாற்றம் இதுவாகும்  என்பது  குறிபிடத்தக்கது. . நிதி அமைச்சர் பதவி செந்தில்பாலாஜி  அல்லது  டி. டி தினகரனின் வலது கரமான  தங்க தமிழ்செல்வன் ஆகியோரில் ஒருவருக்கு வழங்கப்படும் என கூறி வந்த நிலையில், ஜெயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள விஷியம் கோட்டை வட்டாரத்தில் பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தி  உள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு