தீபாவுக்கு என் ஆதரவு……ஜெ அண்ணன் மகன் தீபக் அதிரடி....

 
Published : Feb 23, 2017, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
தீபாவுக்கு என் ஆதரவு……ஜெ அண்ணன் மகன் தீபக் அதிரடி....

சுருக்கம்

தீபாவுக்கு என் ஆதரவு……ஜெ அண்ணன் மகன் தீபக் அதிரடி....

ஜெயலலிதாவின், அண்ணன் மகன் தீபக் திடீரென , சகோதரி தீபாவுக்கு, ஆதரவு கொடுத்துள்ளது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா  மறைவிற்கு பிறகு, அதிமுக ஒபிஎஸ் சசிகலா என இரு தரப்பாக பிரிந்தது. ஆனால் அதற்கு முன்பே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தன் அத்தையின் சிகிச்சை குறித்தும் அவரை சந்திக்க விடாமல் தடுத்தது குறித்தும் பிரச்னை எழுப்பினார் .

இதற்கு அவரது சகோதரர்  தீபக் பதிலடி கொடுத்தார். அவர் சசிகலாவிற்கு ஆதரவாக பேட்டி கொடுத்து போயஸ் இல்லத்திலேயே தங்கி  இருந்தார். இந்நிலையில், ஒபீஎஸ் சசிகலா பிரச்னை பெரிதாக வெடிக்க, ஒபிஎஸ் முற்றிலும் ஓரம் கட்டப்பட்டார்

ஒபிஎஸ் உடன் தீபா கைக்கோர்க்க, சசிகலா தரப்பிற்கு நெருக்கடி ஏற்பட்டது. இதை அடுத்து, ஜெயலலிதா  பிறந்த நாளில் ஒபிஎஸ் தீபா இருவரும், பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளனர்  

இந்நிலையில், அடுத்த அதிரடியாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும், தீபாவுடன் கை கோர்த்துள்ளார் . இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பரபரப்பாக பேட்டி அளித்த தீபக் பல  விஷியங்களை  மனம் திறந்து கூறி உள்ளார் . அதில் போயஸ் தோட்ட இல்லத்தை பற்றி பேசிய அவர் , போயஸ்  தோட்டத்தை யாருக்கும் தாரை வார்த்து  குடுக்க முடியாது , அது  எங்கள் பாட்டியோட  சொத்து, எனக்கும்  தீபாவுக்கும் மட்டுமே சொந்தமானது , யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என  தெரிவித்துள்ளார் . மேலும்,  தனது  ஆதரவு  சசிகலா அத்தைக்கு  மட்டுமே என்று கூறி உள்ள அவர் , தினகரன் , வெங்கடேஷ் இருவரையும் எப்படி இணைக்கலாம் , ஒபிஎஸ்  சரியாகத்தானே செயல்பட்டார்  அவரை ஏன் மாற்ற வேண்டும் ? இவர்கள் இருப்பதாக இருந்தால் என் ஆதரவு தீபாவுக்கு தான்  என்று  அதிரடியாக கூறி உள்ளார் .

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு